பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - சேதுபதி மன்னர் ====----- sis. படிக்கு இன்னாட்டு கணக்கு திருவகத்தியார் மகன் அரங்குளவன் எழுத்து உ எழுநாட்டாசாரி ராசப்பிள்ளை சாட்சி. ” இந்தக் கல்வெட்டு புதுக்கோட்டை சமஸ்தானத்தினால் வெளியிடப்பட்ட புதுக்கோட்டைக் கல்வெட்டுக்களின் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோயிலுக்கு உபயமாகத் திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் வழங்கிய நிலக்கொடையை அவரது விசேஷ அலுவலரான சொக்கப்பன் சேர்வைக்காரரது ஆணையை இந்தக் கல்வெட்டில் தெரிவிப்பதாக உள்ளது. இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள லட்சுமி நாராயணப் பெருமாளுக்குப் பெரியவராய வயல், சிறுவராயவயல், காட்டுக்குறிச்சி, ஆலவயல், உட்கடை விண்ணகன் செய்நிலம் அரைமா, பெரியவயல், இந்த நிலங்களை இந்தக் கோயிலின் பூஜை முதலிய சேவைகளுக்குத் தானமாக அளித்திருப்பதை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இந்தப் பகுதியில் நிலங்களை அளவிட்டுச் சொல்வதில் "மா" என்ற நில அளவு வழக்கில் இருந்தது. சேதுபதி மன்னருக்கு உட்பட்ட சேதுநாட்டின் பிற பகுதிகளில் இதே காலத்தில் நில அளவை குறிப்பிட குறுக்கம் என்ற சொல் வழக்கில் இருந்தது. குறுக்கம் என்பது இன்றைய நில அளவையில் தொண்ணுறு செண்டு அளவாகும். கள்ளர்சீமை சோழ மண்டலத்தின் தெற்குப்பகுதியில் அமைந்து இருந்ததிதானால் சோழ மண்டலத்தில் நில அளவையான "வேலி" "மா" ஆகிய அளவைகள் இந்தப் பகுதியிலும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்திருகக வேண்டும் என கருதப்படுகிறது. இந்தக்கோயிலில் நாட்டிய நங்கையர் ஊழியம் செய்து வந்ததையும் அவர்களுக்காக காணிகள் கொடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வெட்டின் 7வது வரியில் இரண்டு தாசி சொல் பயன்படுத்தப்பட்டதிலிருந்து தெரியவருகிறது.

  • Pudukkottai Inscription (1928)