பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BC) சேதுபதி மன்னர் கோயிலின் இறைவரான தான் தோன்றி ஈசுவரருக்குச் சாத்தனுர் என்ற கிராமத்தைச் சேது மன்னர் நேரில் தானம் வழங்கியதைக் குறிக்கப்பட்டுள்ளது. இந்தத்திருக்கோயில் கேரளசிங்க வளநாட்டில் வேள் குல நிலையான வீரபாண்டிய நல்லூரின் அம்பலத்தாடிச்சதுர்வேதி மங்கலத்தில் சிவபுரி என்னும் ஊரில் அமைந்திருப்பதாக விவரம் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. பாண்டியர் காலத்தில் நிலப்புரப்பு. கூற்றம், வளநாடு, நாடு, ஊர் என்ற பிரிவுகளாக அமைக்கப்பட்டு இருந்தது. அதனைச் சுட்டும் வண்ணம் இந்தச் சிவபுரி கிராமம் கேரளசிங்க வளநாட்டில் அமைந்து இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருப்பதில் இருந்து கேரளாந்தகன் எனப் புகழப்பட்ட பிற்காலப் பாண்டியனான மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பவரது பெயரால் இந்த வளநாடு பெயர் சூட்டப்பட்டிருந்தது. இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி வட்டத்தின் வடபகுதியையும் திருப்பத்தூர் வட்டத்தின் முழுப்பகுதியையும் கொண்டதாக இந்த வளநாடு இருந்து வந்தது. மேலும் இந்த ஊர் சிவப்பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட அம்பலத்தாடி சதுர்வேதிமங்கலம் ஒன்றின் ஒரு பகுதியாகவும் வேள்.குல ராமநிலை என வழங்கப்பட்ட வீரபாண்டிய நல்லூரின் பிறிதொரு பகுதியாகவும் அமைந்திருந்தது. ஆனால் நாளடைவில் இந்த சிவபுரம் என்ற கிராமம் பெருக்கமடைந்து இன்று சிவபுரி, கீழச்சேவல்பட்டி, விராமதி என்ற மூன்று ஊர்களாக மாறியுள்ளன. இது முந்தைய சேதுநாட்டின் வடபகுதியாகவும் திருமலை ரெகுநாத சேதுபதிக்கு முன்னர் வரை இருந்தது. மற்றும் இந்தக் கல்வெட்டில் தானமாக வழங்கப்பட்ட சாத்தனுரின் பெருநான்கு எல்லைகள் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சாத்தன் என்பது இந்துச் சமயப்படி சாஸ்தா என்றும், ஐய்யனார் என்றும் அழைக்கப்படும் காவல் தெய்வத்தின் பெயராகும். மேலும் பாண்டிய நாட்டில் கி.பி.7ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் சமண சமயம் வலுவடைந்த நிலையில் சமணர்களது தலைவரும், தீர்த்தங்கரர்களும் சாத்தன் என்றே வழங்கப்பட்டு வந்தனர். அவர்களது பள்ளிகள் சாத்தன் பள்ளிகள்