பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள்= ரெகுநாத என்ற சிறப்புச் சொல் திருமலை ரகுநாத சேதுபதி காலம் முதல் சேது மன்னர்கள் அனைவருக்கும் அடைமொழியாக வழங்கப்பட்டு வந்துள்ளது. சேது மன்னரை நினைவூட்டும் வகையில் ரகுநாதபுரம் என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது. அவைகளில் ஒன்று இராமநாதபுரம் வட்டம் திருப்புல்லாணியை அடுத்த ரகுநாதபுரம் என்ற ஊரும், தேவகோட்டை வட்டம் கல்லுப்பட்டியை அடுத்த சேதுரகுநாத பட்டணம் என்ற ஊரும், கமுதி வட்டம் அபிராமத்தை அடுத்து ரெகுநாதபுரம் என்ற ஊரும் இருந்துவருகின்றன. அதன் தொடர்ச்சியாக இந்தக் கல்வெட்டில் கண்ட புதுவயல் ஆகிய பகுதிகளுக்கு ரகுநாதபுரம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது பொருத்தமானதாகும். இந்தப் பகுதியில் திருமெய்யம் பெருமாளுக்கு ஒரு மா நிலம் ஒதுக்கீடு செய்தும், எஞ்சியவற்றை ஜோதிடம் வைத்தியம் ஆகிய சமுதாயப் பணிகளுக்காக பிராமணர்களுக்கும், மருத்துவர்களுக்கும் விட்டுக் கொடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிக்கு திருஆழிக்கல் நாட்டப்பட்டதை என்றும் தெரிவிக்கின்றது. இந்தக் கல்வெட்டில் காணப்படும் காடு, அநாதி, தரிசு என்பன பயன்படுத்தப்படாததும், பிறருடைய ஆக்கிரமிப்பில் இல்லாதுதமான நிலங்களாகும். சுரூபம் என்பது வகைப்படுத்தப்படாத நிலத்தை குறிப்பதாகும். தேவதாயம் - திருக்கோயிலுக்கு விடப்படும் நிலம். பிரம்ம தாயம் - பிராமணர்களுக்கு வழங்கப்படும் நிலம். தமிழ் நாட்டில் சமஸ்கிருதம் தொடர்புடைய தெலுங்கு மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட வடுகர்களது ஆதிக்கம் கி.பி.14ம் நூற்றாண்டு தொடக்கம் முதல் கி.பி.1736 வரை நீடித்ததால் திருக்கோயிலில் உள்ள இறைவன் இறைவியின் தமிழ்ப் பெயர்கள் அனைத்தும் தெலுங்கு அல்லது சமஸ்கிருதம் மொழிக்கு மாற்றப்பட்டன. அதன்விளைவுதான் அழகிய மெய்யர், சத்திய மூர்த்தி எனப் புதிய பெயர் பெற்றது. ஆடானை நாயக்கர் அன்பிற்கினியாள் என்ற திருவாடானை இறைவனது பெயர் ஆதிரத்தினேஸ்வரர்