பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/1006

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் - - -- 697 செந் தமிழ்ச் சேது வேந்தர்களது தொண்ணுாறு பட்ட பங்கள் தெரிவிக்கின்ற சிந்தை இனிக்கும் செய்தி களை இதுவரை இந்தத் தொகுப்பில் கண்டோம். ஆலயங்கள், அன்னசத்திரங்கள், அருள்நிறை திரு மடங்கள், அடியார்களது புனித இடங்கள் என்ற பல்வேறு அறக்கோட்டங்களும், அவதானிகள், ஆகம பண்டிதர்கள், அருந்தமிழ்ப் புலவர்கள் ஆகிய அறிஞர் பெருமக்களும், சமூக சமுதாய மேம்பாட்டிற்கு அரிய தொண்டு ஆற்ற இந்த அறக்கொடைகள் உறுதுணை யாக அமைந்து வந்துள்ளன. அன்பு உள்ளத்துடனும், அற உணர்வுடனும் மாண்பான மனித நேயத்தை மையமாகக் கொண்டு, இந்த அறக் கொடைகளை வழங்கிய செம் மனச் சான்றோர்களான சேதுபதி மன்னர்கள் கடந்த நானுாறு ஆண்டுகால வரலாற்றில் வாழ்ந்து வருகின்றார்கள். நன்றி மறவாத தமிழ்மக்களாகிய நாம் அந்த நல்லாட்சி யர்களான வரலாற்று நாயகர்களை நெஞ்சத்தில் நொடிப்பொழுதாவது நிறுத்தி நினைவு கூர் வோமாக !