பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 எஸ். எம். கமால் வழங்குவது போல இந்த மன்னரும் இந்த இருபெரு நெறிகளின் சார்பு தோன்ற செப்பேடுகளில் தமது பெயரை உடையான் திருமலை சேதுபதி எனப் பொறித்துள்ளார். இந்த மன்னரது ஆட்சிக் காலத்தில், மறவர் சீமை நீங்க லான பாண்டிய நாட்டை மதுரையில் இருந்து ஆண்டுவந்தவர், முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் (கி. பி. 1601-1609) ஆவர். இவரது ஆட்சியில் அரசியல் குழப்பமாக இருந்தது.அன்னியர்கள் குறிப்பாக போர்ச்சுகீஸியர், இலங்கை வரையான கிழக்கு கடல் முழுவதையும், தங்களது ஆதிக்கத்திலும், வாணிபபிடிப்பிலும் இருத்தி வைத்துக் கொள்ளும் நிலையெழுந்தது. ஆனால், அவர்களை முழுமையாகப் பொருதி அழிப்பதற்கு அல்லது அவர்களது கடல் செல்வாக்கை குறைப்பதற்கு ஏற்ற மறப்படை, தரைப்படை, கடற்படை, நாயக்க மன்னரிடம் இல்லை. கன்னியாகுமரியில் இருந்து இராமேசுவரம் வரையிலான கடல் பாதையில் போர்ச்சுகீசிய பரங்கிகள் பல இடங்களில் தங்களது நிலைகளையும் கோட்டைகளையும் அமைத்துக் கொண்டு அவைகளை நிர்வகித்து வந்ததுடன், பரவர்களைக் கொண்டு முத்துக்குளித்து பெரும் ஆதாயங்களையும் அடைந்து வந்தனர். இந்தமண்ணின் மரபுகளை சட்டதிட்டங்களை, ஆட்சியாளர்களை, மதித்து நடக்க வேண்டும் என்ற எண்ணங்கூட அவர்களுக்கு இல்லை. இந்நிலையில், மன்னர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரது ராஜகுரு தலயாத்திரையாக இராமேசுவரம் வந்தார். அப்பொழுது மறவர் சீமையின் மன்னரை, அவரது ஆட்சித்திறனை நேரில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப் பொழுது'... தன்னரசு நாடாய், ஊருக்குஊர் கோட்டை உண்டு பண்ணி அரண்மனைக்கு வாரவரிசை கொடாமல், எங்கே பார்த்தாலும், காடுவளத்துக்கொண்டு சீமை கொள்ளையிடு கிறதும்,சேதுமார்க்கத்தில் ராமேசுவரத்துக்குப் போகிறபரிசுகளை சில்லரை பண்ணி, வெட்டிக்குத்தி, பறித்துபோறதுமாயிருந்தது. கர்த்தாக்களாகிய முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கருடைய குருக்கள் ராமேசுவரத்துக்கு தலயாத்திரை சென்றார். அப்போது போக லூரில் இருந்த உடையார் சேதுபதியானவர், குருக்களுக்கு காவ லாக இராமேசுவரம் வரைக்கும் போய் வழிப்பாதையில், சல்லிய