பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 1 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் தளவாய் சேதுபதி காத்த தேவர். 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் திருக்கோயில் இராமநாத பண்டாரம். 3. செப்பேட்டின் காலம் : சகம். 1529. பிரபவ ஆண்டு கார்த்திகை 10 தேதி(2-9-1807) 4. செப்பேட்டின் பொருள் இராமேசுவரம் இராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு ஐந்து கிராமங்கள் தானம். இந்த செப்பேட்டை வழங்கிய மன்னர் தளவாய் சேதுபதி காத்த தேவரது விருதாவளியாக கீழ்க்கண்ட ஐம்பத்து ஒரு சிறப்புப் பெயர்கள் இந்தப்பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. 1. தேவை நகராதிபன் 2. சேது மூலரட்சா துரந்தரன் 3. இராமனாத சுவாமி காரிய 5. பரராசசிங்கம். துரந்தன் 4. சிவபூசா துரந்தரன். 6. சொரிமுத்து வன்னியன் 7. மகாமண்டலேசுவரன். 8. மூவராய கண்டன் 9. கண்ட நாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் 10. பட்டமானங் காத்தான்.