பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 109 னால் அந்த மரத்திற்கு என வரி தண்டல் செய்யப்பட்டது. இன்னும், மீன், பழமரங்கள், வைக்கோல் ஆகியவைகளின் விற்பனைக்கு இராமநாதபுரம் சீமையில் வரிபணமாக வசூலிக்கப் பட்டு வந்தது. அதனையே சொர்ண ஆதாயம் (பனவரி) என வழங்கப்பட்டது. இந்த வருவாய்கள் தவிர, வேறு வரிப்பாடு களும் இந்த தானத்தில் கட்டுப்படும் என்பதனை சகலமும்' என்ற சொல் (வரிகள், 40, 41) சுட்டுகிறது. வரலாற்றுக்குத் தெரிந்த வகையில், இராமேசுவரம் கோயிலில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டளைகளில், தளவாய் சேதுபதி மன்னர் ஏற்படுத்தியுள்ள 'இராமநாதசுவாமி உடை யார் கட்டளை என்பது தான் முதல் கட்டளை, எனத் தெரி கிறது. மற்றும், இராமேசுவரம் திருவிழாக்களில் ஆடி அமாவசைத் திருவிழா சிறப்பானதொன்று. இன்றுபோல நானுாறு ஆண்டு களுக்கு முன்னரும் இந்த விழாக்காலத்தில் தனுக்கோடியில் நீராடுதல் என்னும் வழக்கம் இருந்ததை இந்தப்பட்டயத்தின் வாசகம் (வரிகள் 2, 3, 34) தெரிவிக்கின்றது. தனுக்கோடி இராமேசுவரம் தீவின், கிழக்குக்கோடியில் வில் வளைக்கப் பட்டுள்ளது போல் காணப்படும் கடற்கரையின் தென்கிழக்கு முனையில் இருப்பதாலும், இராவண சம்ஹாரம் முடித்து திரும்பிய இராமபிரான், தமது வில்லின் நுனியினால், சேது அணையை மீண்டும் வேறு எவரும் பயன்படுத்தாமல் இருப்பதற் காக உடைத்ததாலும் அந்த இடம் புனிதமாக கருதப்பட்டு வருகிறது. அத்துடன் இரத்னாகரம் (குடாக்கடல்) எனப்படும் வங்க விரிகுடாவும், மகோததி (பெருங்கடல்) என்ற இந்துமாக் கடலும் இணையும் அந்தச் சிறந்த இடம் புனித சேது தீர்த்த கட்டமாக தொன்மைக்காலந் தொட்டு கருதப்பட்டு வருகிறது. ஆதலால் ஆடி, தை அமாவசைக் காலங்களிலும், அர்த்தோதயம்: மகோதயம் எனப்படும் புனிதக்காலங்களிலும் இங்கு நீராடுதல் வழக்கமாக உள்ளது. அதனால் நீடு தனுக்கோடியினை நினைந்தாலும், புகழ்ந்தாலும், நேர்கண்டாலும், வீடு பெறல் எளிதாகும்.’’ என்ற சேது புராண செய்யுளை நினைத்து 2. Rajaram Rao T—Manual of (1891) p. 285. கலியாணம் - ஜி - இராமேசுவரத்தல வரலாறு (1968) பக்கம் 10. Ramana thapuram Samasthanam 3.