பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 10 எஸ். எம். கமால் சேது மன்னர், ஆடி அமாவசை முழுக்கிற்கு தனுக்கோடி சென்று இருந்த பொழுது இந்த தானத்தை சருவமானிய மாக அறிவித்துள்ளார் என்பதை செப்பேட்டு வரிகள் 33, 34, தெரிவிக்கின்றன. 1964 டிசம்பர், 22/23 தேதியில் ஏற்பட்ட பெரும்புயலில் தனுக்கோடி ஊரும், தீர்த்த கட்டமும் கடல் கொள்ளப்பட்டதால், 1965 லிருந்து இராமேசுவரம் அக்கினி தீர்த்தக்கரை ஆடி, தை, அமாவாசை புனித நீராடல் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.