பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 117 நாத சுவாமிக்கு ஏழுகல் குளித்து அதில் வருகிற ஊதியத்தை கோயிலைச் சாரப்பண்ணிவிச்சுக் கொள்ளச் சொல்லி கட்டளை யிட்ட செய்தியை இந்தச் செப்பேடு சொல்லுகிறது. இராமேசு வரம் கரைக்கு எதிர்க்கரையில் இருப்பது தான் இலங்கை நாட்டு மன்னார் துறைமுகம். இராமபிரானால் அமைக்கப்பட்டதாகக் கருதப்படும் சேது அணைக்கு தெற்கும், இலங்கை நாட்டு கடற் கரைக்கு மேற்கும், தமிழ்நாட்டின் நெல்லை மாவட்ட கடற் கரைக்கு வடக்குமாக உள்ள நான்கு எல்லைக்குட்பட்ட பரந்த கடல் பகுதி மன்னர் வளைகுடா என்று வழங்கப்பட்டு வருகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே இந்தப் பகுதியில். மிகுந்த விலை மதிப்புள்ள முத்துக்கள் அங்கு கிடைத்து வந்தன. சேதுபதி மன்னர்கள் அங்கு முத்துக் குளித்தலை நீண்ட நெடுங் காலப் பழக்கமாகக் கொண்டு இருந்தனர், என்ற உண்மைக்கு எடுத்துக்காட்டாக இந்தச் செப்பேட்டு அடக்க செய்தி அமைந்து இருக்கிறது. அந்தப்பகுதியின் முத்து வளத்திற்கு, நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரங்களும் சான்றாக உள்ளன. இராமநாதபுரம் அடுத்துள்ள சேதுக்கரையையும் திருப்புல்லாணி திவ்ய தலத்தை யும் மங்களா சாசனம் செய்து பாடியுள்ள பாசுரங்களில், திரு மங்கை ஆழ்வார், இலங்கு முத்தும், பவளக் கொழுந்தும், எழில்தாமரைப் புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகு ஆய திருப்புல்லாணி. “ ‘புணரி ஒதம் பணில மணி உந்து புல்லாணியே!' என முத்துக்கு சிறப்பிடம் அளித்துள்ளார். கவிச்சக்கரவர்த்தி கம்பனது இராமாவதாரமும், ... சேண்டை முந்துத் தெளித்து எழு முத்தம் தொத்தலால், அந்தரத்தை எழுமுகில் அடையா அகன்பந்தர் ஒத்தது நெடும்பரிதி வானமே ’, என இந்தக் கடற்கரையில் முத்து தெறித்து எழுந்ததை கற்பனை செய்து காட்டுகிறார். 1. வைத்திய நாதான் T. S. நவமணிகள் (1959) பக்கம் 81 2. பெரிய திருமொழி - மர்ரே. ராஜம் பதிப்பு (1956) பாசுரங்கள் 1768-80 3. இராமாவதாரம் - மர்ரே ராஜம் பதிப்பு (1959) யுத்த காண்டம் - சேதுபந்தன் படலம் - பாடல் எண். 13