பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 எஸ். எம். கமால் அவரைத் தொடர்ந்து அமுத கவிராயரும். நன்னித்திலம் சொரி தேவையர் கோன்ரகுநாதன் பன்னும் தமிழ்ப்பயிர் வாடாது, மாரி இப்பாரின் முத்தும், பொன்னும் சொரியும் ஒரு நாதன் என்றும், தாயிற் சிறந்த தமிழர் பிரானாகிய சேதுபதி, புலவருக்கு பொன்னுடன் முத்தும் சொரியும் பன் புடையவரரக இருந்ததைப் பாடியுள்ளார். இங்கனம் முத்து வளமிக்க வள்ளல்கள் சேதுமன்னர்கள் என்ற பொருளில் சொரிமுத்து வன்னியன் என்ற விருதுடன் வழங்கப்பட்டனர். மேலும் சேதுபதி மன்னர்களது இயற்பெயரிலும் 'முத்து' இணைத்து வழங்கப்பட்டது. முத்து விஜயரகுநாத சேதுபதி, சிவகுமார முத்து விஜயரகுநாத சேதுபதி, முத்து ராமலிங்கசேதுபதி என்பன அவர்களது பெயர்கள். அவர்களது பெண்டுகளது பெயர் களிலும் முத்து இணைந்து வழங்கியது. முத்துவீராயி நாச்சி யார் முத்து ஆத்தாள் நாச்சியார்' என்பன சில. கி.பி.1470ல் மேற்கு கடற்கரையான கோழிக் கோட்டிற்கு வருகை தந்த ருவிய நாட்டு பயணியான அபனாஷி நிகுதின், அங்கு விற்பனைக்கு கொணரப்பட்டு இருந்த பன்னாட்டுப் பொருள்களைக் குறிப்பிடும் பொழுது இராமேசுவரத்தில் இருந்து வரப்பெற்றுள்ள நன்முத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார். சேது மன்னருக்கு இராமேசுவரத்திலும், பெரியப்பட்டினத்திலும் முத்து விற்பனை நிலையங்கள் இருந்தன. அந்தப்பகுதிகள் இன்றும் முறையே முத்துச் சாவடி, முத்துப்பேட்டை என அழைக்கப்பட்டு வருகின்றன. மற்றும், கிழக்கரை துறைமுகத்திலும் முத்து விற்பனை இருந்ததை கி.பி. 1531ம் ஆண்டு கல்வெட்டில்" இருந்து .ெ த ரி கி றது. பதினேழாம் நூற்றாண்டில் இந்தப் பகுதிக்கு வருகை தந்த இத்தாலிய நாட்டு வணிகர் தாவர்னியர் மன்னார் பகுதி முத்துக்கள் மிகவும் சிறந்தவையென்று, பஹ்ரைன் குடா முத்துக்களை ஒப்பிட்டு வரைந்துள்ளார்.? 4. பொன்னங்கால் அமுத கவிராயர் - ஒருதுறைக் கோவை பாடல் எண்கள் : 40 8 104. 5. Appadorai. A. – Economic Conditions of South India Vol Il 6. A. R. 396 / 1907 7. TAVERNIER – J. B. – Trave Is in India – Ch. 2O