பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 1 4 3 8. பல்லக்கு நாயக்கருக்கு பூஜையும் அவரை எழுந்தருளப் பண்ணுகி றதும். 9. வெள்ளை துர்க்கை அம்மனுக்கு பூஜை 10. பரிவார தேவதைகளுக்கு நைவேத்தியம் தீபாராதனை 11. திருவாபரணம் சாத்துகிறது. இந்தப் பணிகளை இவர்கள் குறிப்பிட்ட காலங்களில் மேற்கொண்டிருந்தனர். அதற்காக முந்நாழி பிரசாதமும், சந்த னம் பத்துக்கு ஒன்றும், தோசை, வடை, பணியாரம் பத்துக்கு ஒன்றும், பாக்கு வெற்றிலை ஏழுநாளைக்கு ஒருநாளும், மாதம் ஒன்றுக்கு எழுபடியும் மற்றும், திருக்கார்த்திகை குடை, மார்கழி திருவிழா, மாசிதிருவிழா, ஆடித்திருவிழா ஆகியவைகளுக்கு பஞ்சாமிர்தம் பண்ணிவைத்தால் ஒரு பணமும், கும்பதெட் சினையும் கால்படி அபிஷேகமாகவும், உண்டியலில் கிடைக் கின்ற காசு, எள்ளு ஆகியவைகளில் சுவாமிக்கு இரண்டு பங்கும் குருக்கள்மார்களுக்கு ஒரு பங்கும் என்று ஒப்புக் கொள்ளப்பட் டுள்ளது. அடுத்து சபை பார் அல்லது தானத்தார் செய்ய வேண்டிய கடமைகள். 1) விசுவலிங்கம், ராமலிங்கம், மலைவளர் காதலிஅம்மன் எழுந்தருளும் நாயகர் தாண்டேசுவரர், அம்பலவான சுவாமி ஆகியவர்களுக்கு திருமஞ்சனம் செய்வித்தல் கட்டளையை எடுத்துக்கொடுத்தல். 2) கர்ப்பகிருகத்திற்குள் கொண்டுவந்து வைக்கப்பட்ட படிக் கட்டளையை எடுத்துக் கொடுக்கிறது. 3) சுயம்பாகம் செய்து, நைவேத்தியம் முடிந்தவுடன் அதனை சன்னதியில் கொண்டுவந்து போடுகிறது. 4) தூப தீபம் எடுத்துக் கொடுக்கிறது. 5) பரிவார தேவதையளுக்கு அபிஷேகம் பண்ணி நைவேதியம் செய்கிறது. 6) சீவில்லி நாயகரை பல்லக்கில் எழுந்தருளப் பண்ணுகிறது. 7) ஆனை மேல் திருமஞ்சனம் கொண்டு வருகிறது. 8) பக்தர்களுக்கு கோடி தீர்த்தம் வழங்குதல்