பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧVΙ பட்டுள்ள கொம்பு, குறிலான ஒகரமா அல்லது நெடிலான ஒகாரமா என்பதும், சொற்களின் விகுதியில் உள்ள துணை எழுத்து அந்த எழுத்தின் காலா அல்லது தனி எழுத்தான ரகரமா என்பதனையும் அறிய தொடர் முழுவதையும் பொருள் நோக்கிப் படிக்கும் பொழுதுதான் புரிந்து கொள்ள முடிகிறது. இவை தவிர நீண்ட தொடர்களில் அமையும் உ ம்மை களையும் குறிப் பாக " " கும், தும், யும் , ரும், றும் , லும் என்பனவும், மெய் எழுத்துக்கள் இரட்டித்து ஒலிக்கும் சொற்களில் குறிப்பாக க்க, ட்ட ச்ச த்த, ப்ப, ய்ய, என வருகின்ற உயிர்மெய் எழுத்துக் கள், கூட்டு எழுத்துக்களாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கு எல்லாம் மேலாக சேதுபதி மன்னர்களது சிறப்புப் பெயரான ரகுநாத விஜய என்ற பெயர் குதிவி கள் ஒருசில மன்னரது இயற்பெயராகவே இந்தச் செப்பேடுகளில் காணப்படுவதும், இதுவரை அறியப்படாத சில சேது மன்னர் வழியினரது செப்பேடுகள் கிடைத்திருப்பதும் விளக்க உரை வரை வதில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்துவனாக உள்ளன. மேலும், குறிப்பிடப்பட்டுள்ள சக ஆண்டுக்கு பிழையான தமிழ் ஆண்டுப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற வேறு சிலகுறைபாடுகளும் இந்தச் செப்பேடுகளில் காணப்படுகின்றன. இவைகளை எல்லாம் களைந்த நிலையில், யாவரும் எளிதாக படித்து உணரும் வகை யில் செப்பேட்டின் படிகளும் விளக்கமும் இந்த நூலில் கொடுக்கப் பட்டுள்ளன. ஆனால், செப்பேடுகளின் மூலவாசகங்களை அவைகளில் கண்டுள்ளவாறு எவ்வித மாற்றமும் செய்யாமல் எழுத்து சொல் தொடர் ஆகியவை அப்படியே பிழைகளுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் செப்பேடு வழங்கப்பட்ட அப்தம், திங்கள், நாள், நட்சத்திரம், காலம், ஓரை ஆகிய பகுதிகளிலும் விருதாவளி தொடர்களிலும் காணப்படுவதால் செப்பேட்டின் அடக்கப் பொருளினை அவை சிதைத்து விடவில்லை. கால அருமை நோக்கி விரைவுடன் மெய்ப்புகள் திருத்தம் செய்யப் பட்டதில் எழுத்துப் பிழைகள் சில இடங்களில் எழுந்து நிற்கின் றன. இந்தப் பதிப்பில் உள்ள சிரமங்களைக் கருதி வாசகப் பெருமக்கள் அவைகளை பொருட்படுத்தாமல் வரலாற்று நாயகர்