பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 14 எஸ். எம். கமால் இந்தக் கடமைகளை உரியகாலங்களில் செய்வதற்காக நாளொன்றுக்கு பிரசாதம் இருபத்து நான்கு நாழியும், சுத்துக் கட்டளை உபயத்தில் குறுணிக்கு ஒரு நாழிப் பிரசாதமும், கறிய முது எட்டில் ஒன்றும், வேறு சில பணிகளுக்கு நாளொன்றுக்கு அரைப்பணமாக மாதமொன்றிற்கு பதினைந்து பணமும் பெற்றுக் கொள்வது என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்களில் மூன்றாவது பிரிவினரான தமிழ் ஆரியர்களது கடமைகளாவன : கோவில் சன்னதிகளில் நைவேத்தியம் பண்ணின தளிகை மாற்றுகிறது. சைவப் பண்டாரங்கள் இருக்கிற அறைகள் தவிர, ஏனைய அறைகளில் தங்கி இருக்கிறது. சந்தனம் அரைத்துக் கொடுத்தல். திருவிளக்கு பார்க்கிறது, பல்லக்கு எழுந்தருளப் பண்ணுகிறது, உற்சவத்திற்கு சுவாமியைத் தேடகத்தில், திருத் தேரில் எழுந்தருளச் செய்வது, அந்தந்த சன்னதி வாயில்களில் காத்து இருப்பது. வில்வம், திருமாலை கட்டுகிற பண்டாரம் அவர்கள் பணியைச் செய்கிறது. திருவாபரணம் கொண்டு போய் வைக்கிறது. கட்டியம், அடப்பம் - காளாஞ்சி, அன்ன கெண்டிகை பரிசை, படியொழுக்கு சுலமனை தட்டிப்பார்க்கிறது. நிர்மாலியம் செலவு செய்தல், பெரிய மனிதருக்கு பிரசாதம் கொண்டுபோய் கொடுத்தல் ஆகிய பணிகளைச் செய்வதாக இந்த அந்தணர்கள் இணக்கம் தெரிவித் துள்ளனர். கோயில் பிரசாதம் முதலியவைகளில், முந்தைய இரு பிரிவினருக்கும் நியதி செய்யப்பட்டுள்ளவாறு, இவர்களுக்கு இந்த இசைவு முறியில் குறிப்பிடப்படவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதை துலக்க இயலவில்லை என்றாலும், இந்தப்பணியாளர்களுக்கு திருக்கோயில் திருப்பணிக்காக பிர சாதம், வருவாயும் இருந்து இருக்க வேண்டும். ஒரு பழைய ஆவணம் ஒன்றின்படி, ! இராமேசுவரம் திருக்கோயிலில் நாளொன்றுக்கு நூற்று எண்பது படி அரிசி திருவமுதுக்காக செலவு செய்யப்பட்டது என்றும் இதில் நாற்பது படி அரிசி கோயில் பணியாளர்களுக்கானது என்று குறிப்பிடப்பட்டு இருப் தால் இதில் தமிழ் ஆரியரும் அடங்குவர் எனக் கொள்ளலாம். 2. The Indian Antiquary – The Rituals of Rameswaram Temple (1883) р. З 17