பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 எஸ். எம் . கமால் பணத்தைப் பற்றி விளக்கம் இல்லை. பெரும்பாலும், பதினே ழாம் நூற்றாண்டில் சேதுபதி மன்னர்களால் வெளியிடப்பட்ட சுழிப்பனம்' மின்னல் பணம்’ ’ என்ற வகைகளில் ஒரு வகையை இந்த பணம் சேர்ந்ததாக இருக்க வேண்டும். திருமஞ்சனம் - : திருமேனி நீராட்டலுக்குரிய நீர் தளிகை : கடவுளுக்கு படைக்கப்படும் சோறு கைவித்தாரம் : ஒப்பனை - திருவிளக்கு பார்த்தல் : எண்ணையினால் எரிந்து கொண்டு இருக்கும் விளக்கின் திரி அணைந்து விடாமல் அடிக்கடி கண் காணித்தல். கோடி தீர்த்தம் : இராமேசுவரம் திருக்கோயிலில் உள்ள இருபத்து இரண்டு தீர்த்தங்களில் மிக புனித மாமாகக் கருதப்படுவது. தல யாத்திரை வருபவர்கள் கடைசியாக (கோடி) நீராட வேண்டிய தீர்த்தமாத லின் கோடி தீர்த்தம் என வழங்ப் பட்டது. ராச முத்திரை : மன்னரது முத்திரையுடன் வெளியிடப் படும் ஆணை. சுவந்தரம் : சுவந்திரம் அல்லது உரிமை. அடியொழுக்கு, சுத்த : கிளுரு : பொருள் புலப்படவில்லை. இசைவுமுறியில் கையெழுத்திட்ட தமிழ் ஆரியரது பெயர் கள், நல்ல தமிழ்ப் பெயர்களாக அமைந்து இருப்பது அருமையாக உள்ளது (உ-ம்) வேல் வாங்கினான், தம்பிராமன், அமரர் தொழநின்றான். கடலடைத்தான் கெங்கையாடிப் பெருமாள் தம்பிநயினார், ஒப்பிலாத பெருமாள் என்ற பெயர்கள் அவை.