பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 சேதுபதி மன்னர் செப்பேடுகள் வரம் பருவதவர்த்தினி அம்மனுக்கு சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, திருவிளக்கு, ஆகிய உபயங்களுக்காக இந்த ஊர் வழங்கப் பட்டுள்ளது. இந்த ஊரிலிருந்து அரசுக்கு இறுக்கப்பட்ட வரு வாய் விபரம் மற்றும் இந்த ஊருக்கான நான்கெல்கை ஆகியவை இந்தச் செப்பேட்டில் காணப்படவில்லையாதலால் அன்றைய நிலையில் இந்த ஊர் விளைநிலங்களை மட்டும் கொண்ட குடிகள் இல்லாத ஊராக இருந்திருக்க வேண்டும். இன்று கமுதி வட்டத்தில் கமுதி உத்திரகோசமங்கை சாலைக்கு வடக்கே இரண்டு கல் தொலைவில் மக்கள் குடியிருப்புடன் இந்த ஊர் இருந்து வருகிறது. சேதுபதி மன்னர் பட்டமேற்கும் பொழுது திருக்கோவில் களிலிருந்து தீர்த்தம், பிரசாதம் போன்றவைகளை பெற்றுக் கொள்வது மரபாகும். அந்த முறையில் இந்த மன்னரும் இராமேசு வரம் திருக்கோயிலிலிருந்து பிரசாதம் முதலியவற்றுடன் அரச சின்னங்களான குடை உபய சாமரம், காவிடால், காவி பண்ணாகம், காவிக்கூடாரம், ஆகியவைகளைப் பெற்றுக் கொண்டதை பூரீராமநாதசுவாமியே அவைகளை அனுப்பியிருப்ப தாக பயபக்தியுடன் ஏற்றுக் கொண்டதை மன்னர் செப்பேட்டில் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண் மனையில் முத்துவிஜய ரெகுநாத சேதுபதி மன்னருக்கு திருப் புல்லாணிப் பெருமாளும், இராஜராஜேஸ்வரியம்மனும் செங்கோல் வழங்குவதாக உள்ள சுவரோவியங்கள் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. பட்டக்காணிக்கை என்பது சேதுபதி மன்னர் பட்டமேற்ற பிறகு தாம் வழிபடும் இறைவனுக்கு காணிக்கையாக வழங்குவது. இந்தச் செப்பேட்டில் அந்தக்காணிக்கை மருதங்கநல்லூர் என்ற ஊராகப் பட்டகாணிக்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது.