பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 9. (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி (கி.பி. 1622-35) 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் திருக்கோயில் 3. செப்பேட்டுக் காலம் : சாலிவாகன சகாத்தம் 1553 பிரஜோற்பதி தை 25ம் நாள் (கி.பி. 23-1-1632) 4. செப்பேட்டின் பொருள் : இராமேசுவரம் இராமனாத சுவாமிக்கு சேது கால் என்ற கிராமத்தை பட்ட காணிக்கையாக வழங்குதல். | நாற்பத்து ஏழு வரிகளைக் கொண்ட இந்த பட்டயத்தில் வழக்கம் போல மன்னரது ஐம்பத்து இரண்டு விருதாவளிகள் (வரிகள் 4-19 வரை) 16 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும், இந்த மன்னரது முந்தைய செப்பேடுகளில் கண்டவையாதலின் அவை பற்றி சிறப்பாக குறிப்பிட வேண் டியது ஒன்றும் இல்லை. இராமேசுவரம் திருக்கோயிலில் அமர்ந்துள்ள பர்வதவர்த் தினி அம்மனுக்கு சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு திருவிளக்கிற்காக வழங்கப்பட்ட பட்டாக்காணி கிராமத்தை முந்தை செப்பேடு சொல்கிறது அல்லவா? அதே கோயிலின் இராமனாத சுவாமிக்கு, அதே மன்னரால், அதே நாளில், பட்டக்காணியாக சேது கால் என்ற கிராமத்தையும் மன்னர் வழங்கியதை இந்தச் செப்பேடு குறிப்பிடுகின்றது. காணி என்ற சொல் தமிழில் வென்னிலம்,