பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளவாய் சேதுபதி என்ற இரண்டாம் சடைக்கன் சேதுபதி (ést. (T. 1635-1645) இந்த மன்னரது ஆட்சிக்காலம் அமைதிக்களமாகத் தொடர்ந்தது. என்றாலும் மறைந்த கூத்தன் சேதுபதியின் காமக் கிழத்தியின் மகன் தம்பி மறவர்சீமையின் ஆட்சி உரிமை பற்றிய முறையீட்டை மதுரை மன்னர் திருமலையிடம் எடுத்துச் சென்றான். சேதுபதி மன்னரது செங்கோன்மையிலும் செயல் திறனிலும் பொறாமை கொண்டு புழுங்கிய திருமலை மன்னர், தம்பியின் வாரிசு உரிமையை வலியுறுத்தி மறவர் சீமைப் பிரி வினைக்கு முயன்றனர். பிரிவினையென்றாலே பெருமைக்கும் வலிமைக்கும் பாதகம் விளைவிப்பது என்பது தான் பொருள். மறவர் சீமையின் வீழ்ச்சி மதுரை மன்னருக்கு மகிழ்ச்சி அளிப்பது. சேதுபதி மன்னர் திருமலை நாயக்கரது அறிவுரை யைப் புறக்கணித்தார். 'வணங்காமல் இருக்கும் வம்பன் மறவனையும் வளைத்துப் பிடித்து வணங்க வைப்பேன் ... என திருமலை மன்னரது தளவாய் இராமப் பையன் சூளுரைத்து மறவர் சீமை மீது தண்டெடுத்தான். மதுரை மன்னரது எழுபத்து இரண்டு பாளையக்காரர்களது படைகளும் மதுரைப்படையுடன்