பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 1 Foo) இணைந்து மறவர் சீமைக்குள் புகுந்தன. பல இடங்களில் நிகழ்ந்த போர்களில் மறப்படை பின்னடைந்து இராமேசுவரம் தீவுக்குள் சென்றன. அங்கு இறுதிப் போரை இயற்றுவதற்கு இரண்டாம் சடைக்கனும் அவரது மைத்துனர் வன்னியத் தேவனும் ஈடுபட்டனர். இதனையறிந்த இராமப்பையன் கோவா விற்கு விரைந்து சென்று போர்ச்சுகீசிய பரங்கிகளது ஆயுத உதவியைக் கோரிப் பெற்றான். மறவர் அணிக்கு டச்சுக்காரர்கள் உறுதுணையாக இருந்தனர். தரையிலும் கடலிலும் கடும்போர் தொடங்கியது. இராமப்பையன் களத்தில் வீழ்ந்து இறந்தான். அவரது மருமகன் சிவராமையா மதுரைப் படைகளுக்கு தலைமை தாங்கினார். மறப்படையின் பெருவீரன் வன்னியத் தேவன் அம்மைகண்டு வீழ்ந்ததும் சேதுபதி சிறைப்பிடிக்கப்பட்டு மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். சேதுபதி சீமையில் குழப்பம் நிர்வாகச் சீரழிவு. வேறு வழி இல்லாமல் திருமலைநாயக்கன் சேதுபதியை விடுதலை செய்து புகலூருக்கு அனுப்பி வைத்தார். சேதுபதி சீமையில் அமைதி ஏற்பட்டது. அடுத்த ஆறு ஆண்டுகளில், இராமேசு வரம் திருப்பணியில் மன்னர் ஈடுபட்டார். மூன்றாம் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் சபாபதி மண்டபம் எழுந்தது. கிழக்கு வாயிலில் எழுநிலை மாடக்கோபுரம் அமைக்க ஆயத்தங்கள் செய்த நிலையில் இந்த மன்னர் காலமானார். இவர் வழங்கியுள்ள, தானங்கள் பற்றிய ஆவணங்கள் செப்பேடுகள் இதுவரை கிடைக்கவில்லை.