பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 167 இந்த மன்னரது வீரத்தை விளம்பும் விருதுகளாகக் குறிக்கப் பட்டுள்ளன. மேலும் ஹிரண்ய கர்ப்பயாசி என்ற புதிய அடை மொழியொன்றும் (வரி23) இந்தச் செப்பேட்டில் காணப்படுகிறது. ஹறிரண்யகர்ப்பம் என்பது பசும்பொன். இத்தகைய பசும்பொன்னி லான பசு உருவினை வைத்து வேள்வி யொன்றை இயற்றி அந்தப் பசுவினது புனித வயிற்றில் இருந்து பிறப்பு எய்துவது போன்ற சடங்கினைச் செய்து முடித்த பிறகு அந்த பொன்னுருவை அந்தணர்களுக்கு தானம் வழங்கிய காரணத்தினால் இந்த அடை மொழி இந்த மன்னருக்கு வழங்கப்பட்டுள்ளது. இராமேசுவரம் பூரீ இராமனாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் பூசை, நைவேத்தியத்திற்கும், ஆவணி மூலத்திருவிழா உற்சவத்திற்கும் உடலாக முகிழ்த்தகம் என்ற கிராமத்தை தானம் வழங்கிய செய்தியை இந்தச் செப்பேடு சொல்லுகிறது. முந்தைய சேது மன்னர்கள் இராமேசுவரம், திருக்கோயில் பூசை, மஞ்சனம், காப்பு, போன்ற கைங்கரியங்களுக்கு பலதானங்கள் செய்து இருந்த பொழுதும், அவைகள் இன்னும் சிறப்பாக நடைபெறு வதற்கு உதவ இந்த நிலக்கொடையும் அளிக்கப்பட்டு இருக் கிறது. மேலும், இந்த நிலக்கொடை ஆவணிமூலத்திருவிழா : விற்காக என்றும் குறிக்கப்பட்டுள்ளது. ஆவணி மூலத்திருவிழா, பல நூற்றாண்டுகளாக மதுரையில் தான் நடந்து வருகிறது. அங்கு ஆலவாய் அமர்ந்த அருஞ்சடைக்கடவுள் அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஒன்றாக ஆவணி மூல நட்சத்திரத்தன்று தமது அன்பரான வாதவூரடிகளது வாக்குறுதியை நிறைவேற்றி னார் இறைவன். அதாவது, கிழக்கு கடற்கரையில் வந்து கரை இறங்கிய அரபிக் குதிரைகளை வாங்கி வருமாறு அரிமர்த்தன பாண்டியன் கொடுத்தபொருள் அனைத்தையும் அவனது அமைச் சரானவாதவூர்அடிகள் திருப்பெருந்துறை திருக்கோயில் அமைப்பு பணியில் செலவழித்து விட்டதற்காக அவரைப் பாண்டியன் பல வகையிலும் வருத்தியபொழுது, அடிகளாரை விடுவிக்கும் வகை யில், ஆலம் அருந்தி அவனி காத்த பெருமான் நரிகளையெல்லாம் பரியாக்கிவந்து பாண்டியனிடம் கையளித்தது ஆவணி மூலத்திரு நாளன்று. இந்தச் செய்தி வடமொழியில் உள்ள ஹாலாஸ்ய புராணத்திலும் வேம்பத்துரார் பாடிய திருவாலவாயுடையார் புராணத்தில் இருபத்து எட்டாவது படலமாகவும், பரஞ்சோதி