பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 169 _ க_ - நெடுமரம் பருத்தி ஊர் பிரண்டை வயல் வாரிக் குடி அரும் பூர் புல்லுமடை, பில்லுமாரி, பில்லூர், பூவாணி மலரி மருதாணி மாங்குடி முள்ளுமுளை இவைகளைப் போலவே, இந்த அறக்கொடையாக அமைந்துள்ள முகிழ்த்தகம்’ பெயரும் மலர்ச்சிபெற்றது’’ என்ற பொருளில் அமைந்துள்ளது. அத்துடன் இந்த வட்டாரத்தில் சமண சமயச் செல்வாக்கு பெற்று இருந்த பொழுது, இந்த ஊரும் ஏற்பட்டு இருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது. அதற்கான தடை யங்கள் எதுவும் இன்று இந்த ஊரில் இல்லை. என்றாலும், அண் மையில் உள்ள முதுகுளத்தூர் வட்ட கிராமமான அறப்போது” போன்று அறம் முகிழ்த்த ஊராக இருந்து இந்த ஊர் அமைந்து இருத்தல் வேண்டும். ஏனெனில் இந்த வட்டாரத்தில் பூமலி அசோகின் புனை நிழல் அமர்ந்த சாத்தனது பெயரில் சாத் தன் ஏந்தல், சாத்தன்குடி, சாத்தன் குளம், சாத்தனூர், குணங் குடி, ஜீனமங்கலம் ஜீனங்குடி, ஜீனேந்திர மங்கலம் என்ற ஊர்கள் அமைந்து இருப்பதும், திருவெத்தியூர் அருகே புத்தன்வயல் என்ற இடத்திலும், கீழப்பனையூர் செம்பிலான்குடி ஆகிய ஊர்களில் சமண சமயத்தின் தலையாய தீர்த்தங்கரரான மகா வீரரின் திருமேனிகள் இன்றும் இருந்து வருவதும் இதனை உறுதிபடுத்துகின்றன. முந்தைய இரண்டு சேதுபதி மன்னர் காலங்களைப் போன்று! இந்த மன்னரது செப்பேட்டிலும் தானம் வழங்கப் பட்ட ஊருக்கான நான்கு எல்லைகள் விளக்கமாகக் குறிப்பிடப் படும் வழக்கம் இல்லை, என்பது தெரியவருகிறது. அதனால் முகிழ்த்தகம் கிராமமும் அதன் உள்கடை ஏந்தல்களும், பரினாங் கெல்கைக்குட்பட்ட நஞ்சை, புஞ்சை, திட்டு திடல், ....' என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலங்களின் வருவாய் மீது, பலவரி, சொர்ணாதாயம் என்ற இருவரிகள் மட்டும் வசூலிக்கப் பட்டன என்றும், ஏனைய வருவாய்கள் அனைத்தும் சகல சமுதாயம்' என்ற சொற்களில் அடக்கம் பெற்றுள்ளன.