பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 195 அரிச்சந்திரன் என்பது சத்திய வாண்மையாகும் அரிச்சந்திரன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விருதுகளில் விஜயநகர மன்னர்களது விருதுகளான மகாமண்டலேசுவரன், பாசைக்குத் தப்புவராய கண்டன், கண்ட நாடு கொண்டு கொண் நாடு கொடாதான், உரிகோல் சுரதனன் என்ற நான்கு விருதுகளைத் தவிர ஏனைய விருதுகளுடன், சந்திரசேகரன், பரராச சேகர நிரகாருக சேகரன், இரவிமார்த்தண்டன், இரவி வர்மன், சூரியன், ஸ்வஸ்தி பூரீமான், சுரக்கயல், வீரமகாகெம் பீரன், பரதநாடக பத்திப்பிரியன், கருணாவுதாரன், கந்தர்ப்ப புரபாணன், நாடுகலக்கிய வாகன புருஷன், இரவிகுலசேகர தளவராயன் ஆகிய பதினான்கு புதிய விருதுகளும் இந்தப் பட்டயத்தில் உள்ளன. பொதுவாக மன்னரது கொடை வீரம் கலைகளில் ஈடுபாடு ஆகியவைகளையே இந்த விருதுகளும் குறிப்பனவாக உள்ளன. சுரக்கயல், கந்தர்ப்பபுரபாணன், என்ற விருதுகளுக்கும் பொருள் விளங்க வில்லை. ஆனால் நாடுகலக்கிய வாகன என்பது திருமலை சேதுபதி மன்னரது சிறந்த குதிரை யைக் குறிப்பதாக உள்ளது. பெரும்பாலும் அந்தக் குதிரை சிறந்த அரபு நாட்டுக் குதிரையாக இருத்தல் வேண்டும். பரஞ் சோதி முனிவர் குறிப்பிட்டுள்ள, புரவிய டி வைத்தால் ஒத்த பந்தெனவு நின்றாலோ மலையெனவும் ஒலித்தாலோ பகடு சீறும் வெந்தறுகணரி யெனவும் வேகத்தாற் காற்றெனவும் மிதிக்கும் கூத்தால் சந்த நட மகளெனவும் நடக்கில் அரி தன்று எனவும். . . . . . . . . . . , , சொல்லக்கூடிய பரியாக இருக்க வேண்டும். அதனால், திருமலை சேதுபதி மன்னர் நாடுகலக்கிய செயல்களுக்கு அந்தக் குதிரை உறுதுணை யாக இருந்து இருக்க வேண்டும். இந்த மன்னரது முந்தை யோரான இரண்டாம் சடைக்கன் என்ற தளவாய் சேதுபதி (கி.பி. 1635-46) யின் மைத்துனரும் போகலூர் கோட்டைத் தளபதியுமான வன்னியத் தேவன். நாடுகலக்கி’ என்ற சிறந்த 1. பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடற்புராணம் (1939) நரி பரியாக்கிய படலம் - பாடல் எண். 118.