பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஸ் . எம். கமால் 216 இந்த தருமம் என்றென்றும் நீடித்து நடக்க வேண்டும் என்ற மன்னரது உள்ளக்கிடக்கை நம்முடைய ஆதீன பாரம் பரையாக உள்ள .... இந்த தர்ம சாதனப் பட்டயப்படிக்கு ஒரு சில்லறையளும் வாராமல் இத்தப் புண்ணியத்தை நடத்திவரக் கடவராகவும் .... (வரிகள் 31-33) அனேக சிவத்தலங்களிலே அன்னதானங்கள் பண்ணின பலங்களையும் பெற்று மகாராசாக் களாக இருக்கக் கடவாராகவும் (வரிகள் (36-37) என்ற தொடர்களிலும் புலப்படுகின்றது. மேலும், இந்த தருமத்தை வலியுறுத்த இந்தச் செப்பேட்டின் இரண்டாவது பக்கத்தில் சிவஞானச் செயலுடையார் கையில்..... என்ற செய்யுளும் மேற்கோளாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செப்பேட்டில் இருந்து இன்னொரு செய்தியும் தெரியவருகிறது. சேதுபதி மன்னர் இந்தச் செப்பேட்டை நிறைவு செய்து கையெழுத்திட்ட பின்னர், இந்த தருமத்திற்கு வழங்கப்பட்ட கிராமங்களில் நாணக்குடிக்குப்பதில் நாட்டிசேரியை வழங்குதல் நல்லது என மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், அந்த மாற்றத்தை மீண்டும் இதே செப்சேட்டில் தொடர்ந்து பதிவு செய்து (வரி 47) மீண்டும் சேதுபதி மன்னர் கையெழுத் திட்டு வழங்கி உள்ளார். செப்பேடுகளில் காணப்பெறாத புதுமை இந்த நில மாற்றப்பதிவு மேலும் சேதுபதி மன்னர் முதலில் (வரி 45) திருமலை சேதுபதி ரகுநாதத் தேவர்' எனக் கைச்சாத்திட்ட பின்னர் ஊர் மாற்றத்தை ஒப்புதல் செய்த பொழுது நீ சுப்பிர மணிய திருமலைய சேதுபதி ரகுநாதன் எனப் பொறித்திருப்பதும் (வரி 48) மற்றுமொரு புதுமையாகத் தோன்றுவதுடன், மன்னருக்கு உள்ள விருதாவளிகள் ஒன்றான சுப்பிரமணிய பாதார விந்த சேவிதன் (வரிகள் 5-6) என்ற விருதினை உறுதிபடுத்துவதாகவும் உள்ளது. திருவாவடுதுறை ஆதினகர்த்தாக்கள், முன்னர் பண் டாரம்’ ’ என்று மட்டும் நல்லதமிழில் வழங்கப்பட்டனர். என்ற செய்தியினை செப்பேட்டுவரிகள் 4, 46 தெரிவிக்கின்றன. ஆதீன கர்த்தர் அல்லது சந்நிதானம் என்பது வடசொல். தமிழகத்தில் உள்ள தொன்மையான பதினெட்டு சுத்த சைவ ஆதினங்களில் திருவாவடுதுறை முதன்மையானது. இந்தச் செப்பேட்டினைப்