பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 18 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : ரெகுநாத திருமலை சேதுபதி செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில் 3. செப்பேட்டின் காலம் : சகம் 1589 பிலவங்க ஆண்டு மாதம் (கி, பி. 18.3.1668) 4. செப்பேட்டின் பொருள் : இராமநாதசுவாமி அறக்கட்ட ளைக்கு சென்னிலக்குடி கிராமம் தானம், இந்த அறக்கொடையை வழங்கிய திருமலை சேதுபதி மன்னரது விருதாவளியாக அறுபத்து ஐந்து சிறப்புப் பெயர் கள் இந்தச் செப்பேட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இந்த மன்னரது முந்தைய செப்பேடுகளில் குறிக்கப் பட்டவைகள். சேதுபதி மன்னரது அலுவலர்களில் ஒருவரான கொழுந் துறைச் சிதம்பரம் சேர்வைக்காரன் என்பவன் இராமேசுவரம் திருக்கோயிலின் அறக்கட்டளை தன்மத்திற்கு சென்னிலக்குடி என்ற கிராமத்தை வழங்கினான். அதனை அந்த தர்மத்தை ஒப்புதல் செய்து வழங்கிய தான சாசனமாக இந்தச் செப்பேடு அமைந்துள்ளது. சேர்வைக்காரன் என்பது பொதுவாக மறவர் சீமையிலுள்ள முக்குலத்தோரில் ஒரு பிரிவினரான அகம்படிய மக்களை குறிப்பதாகும். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சேர்வைக்காரன் என்ற சொல் மன்னரது தளபதி அல்லது ஆளுநர் என்ற பதவியின் விகுதியாக அமைந்துள்ளது. இந்த