பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 7/s1 அறக்கட்டளையை வழங்கிய கூரிச்சாத்தான் சேர்வைக்கான் கொழுந்துறை என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் என்பதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. கொழுந்துறை இன்றைய இராமநாதபுர மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் அமைந்த சிற்றுார் ஆகும். அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ள சென்னிலக் குடி இன்றைய காமராஜர் மாவட்டம் திருச்சுழி வட்டத்தில் உள்ளது. இந்தக் கிராமத்தின் எல்லைகளான 1டையன்குளம். அஞ் சானைக்குத்தி, சிறுகுளம், பூரீராமனேந்தல், காரைக்குளம், ஆகிய ஊர்கள் இன்னும் வழக்கில் உள்ளன. பள்ளிமடை என்ற கிராமம் இன்று பள்ளி மடம் என்று வழங்கப்பட்டு வருகிறது. பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் தென்பகுதியை ஆட்சி செய்த வீரபாண்டியன் இளமையில் காலமாகிய தனது சகோதரன் சுந்தரபாண்யனது பூதவுடல் மீது இங்கு பள்ளிப்படை கோயில் ஒன்றை எழுப்பினான். இந்தக்கோயில் பள்ளிப்படை சுந்தரபாண்டிய ஈஸ்வரம் என கல் வெட்டுக்களில் காணப்படு கிறது. இந்தப் பள்ளிப் படை நாளடைவில் பள்ளி மடமாக மருவியுள்ளது. மேலே கண்ட ஊர்களனைத்தும் முந்தைய மறவர் சீமை யின் நிலக் கூறான பருத்திக்குடி நாட்டில் திசைகுருளி தட்டில் அமைந்திருந்தன. பருத்திக்குடி நாடு என்பது பாண்டியப் பேர ரசின் நிலப்பிரிவு என்பதை பள்ளிமடத்தில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் இருந்து தெரியவருகிறது.* 1. குடந்தை சேதுராமன் - என் - பாண்டியர் வரலாறு (1989) பக்கம். 17. 2. பள்ளிமடம் கல்வெட்டு - A. R. 420/1916.