பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 எஸ் எம். கமால் பரதேகிமுத்திரை அம்பலத்தாடும் பண்டாரத்திடம் தானமாக வழங்கியுள்ளார். திருப்பெருந்துறை சிவாலயத்திருப்பணியில் ஈடுபட்டு இருந்த பரதேசி (பணியாளர்) கள் தலைவர் என்ற முறையில் பரதேசிமுத்திரை' என்ற சொல் (வரி 27) கை யாளப்பட்டுள்ளது. இந்தப் பெருங்காட்டின் பரப்பு இவ்வளவு என்று குறிப்பிடாததில் இருந்து, மிகப்பரந்த இடம் என்பது புலப்படுகிறது. பெரும்பாலும் இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார் கோயில் வட்டங்களில் இந்தக்காடு அமைந்து இருத்தல் வேண்டும். இந்தச் செப்பேட்டில் தானம் வழங்கப்பட்ட இடமான பெருங்காடு, ஏற்கனவே இந்த திருக்கோயிலுக்குச் சொந்தமான காட்டுப்பகுதியை அடுத்து இருந்தது. என்பதை இந்தக் காட்டின் வடபாற்கெல்கை கோயில் காட்டுக்கும் நாகமங்கலத்துக்குள் வெளிக்கும் தெற்கு...' (வரிகள் 38-39) என்ற தொடர் சுட்டு கிறது. கிழக்கு எல்கையாக இடையன் கோட்டைக்குள் வெளி' குள் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை எப்பொழுது யாரால் நிர்மாணிக்கப்பட்டு எப்பொழுது அழிந்தது என்ற விபரங்கள் அறியத்தக்கதாக இல்லை. இந்தப்பகுதியில் சமணர் குடி இருப்பு இருந்து இருக்கவேண்டும் என்பதை நாகமங்கலம் என்ற ஊர்ப்பெயரில் இருந்து தெரிய வருகிறது. மேலும் இந்தப் பட்டயத்தை வரைந்தவர் பெயர் குறிப்பிடப் படவில்லை. தொடர்ந்து பட்டயத்தின் வரிகள் 58-61ல் முன்பு குறிப்பிட்ட வடமொழி சுலோகம் பொறிக்கப்பட்டு இருப்பதால், முந்தைய இரண்டு பட்டயங்களையும் பொறித்தவரே இதனை யும் வரைந்து இருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது.