பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 22 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : திருமலை ரகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : திருப்பெருந்துறை திருக்கோயில் 3. செப்பேட்டின் காலம் : சகம் (595 பிரமாதிச வைகாசி 15ந் தேதி (கி.பி. 12.5.1673) 4. செப்பெட்டின் பொருள் : மேலே கண்ட கோயில் உச்சிகால கட்டளைக்கு தச்சமல்லி கிராமம் தானம். இந்தச் செப்பேட்டை வழங்கிய திருமலை சேதுபதி மன்னர் மதுரை நாயக்கர் மன்னருடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த காரணத்தினால் இந்த செப்பேட்டின் தொடக்கத் தில் முதல் இருபது வரிகளில் விஜயநகரமன்னர்களின் விருதா வளிகளும் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து, இருபத்தி நான்காவது வரிகளிலிருந்து முப்பத்தி ஐந்தாவது வரி வரை சேது ன்னர்களது விருதாவளியும் பொறிக்கப்பட்டுள்ளன. திருவாவடுதுறை ஆதினத்திடம கொண்டிருந்த ஈடுபாடு கரரணமாக இந்த மன்னர் இந்த ஆதினத்துக்கும் திருக்கோயி லுக்கும் ஏற்கனவே பல கொடைகளை அளித்துள்ளார். இந்தச் செப்பேட்டின் மூலம் அந்தக் கோயிலில் உச்சிக்காலக் கட்ட ளையை நாள்தோறும் நிறைவேற்றி வைப்பதற்கும் அங்கு மடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கும் தச்சமல்லி ஏம்பல் என்ற கிரா மத்தையும் உடலாக வழங்கியிருப்பதை தெரிந்துகொள்ள முடி கிறது. கொடையாக வழங்கப்பட்ட தச்சமல்லி அமரடக்கி பற்றில் விரானு ர் உட்கடையில் அமைந்திருந்ததை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.