பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 26 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : ரெகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர் 2. செப்பேடு பெற்றவர் : திருஉத்திர கோசமங்கை மங்கள நாத சுவாமி திருக்கோயில். 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1600 காள யுக்தி ஆண்டு வைகாசி (கி.பி. 25-5-1678) 4. செப்பேட்டின் பொருள் : மேலேகண்ட கோயிலுக்கு திரு விடையாட்டக் காணியாக நிலக் கொடை இந்தச் செப்பேட்டில் ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னரது, விருதாவளிகள் மூன்று மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை நகராதிபன் சேதுமூல ரட்சா, துரந்தரன், சிவகாரிய துரந்தரன் என்பன, மன்னரது இராமேசுவரம் திருக்கோயிலின் பால் உள்ள ஈடுபாட்டை குறிப்பிடுவன. திருமலை ரெகுநாத சேதுபதி பரிதாபி ஆண்டு ஆனி மாத (கி.பி. 1672)ம் காலமானார் என்றும் அவருக்கு வாரிசு இல்லாத காரணத்தினால் கி.பி. 1673ல் அவரது சகோதரர் ராஜ சூரிய சேதுபதி அரியணை ஏறியதாகவும் அன் னார் தஞ்சை நாயக்கமன்னரது சதிச்செயலினால் திருச்சியில் இறந்து விட்ட தால் அவரது இளவல் அதான சேதுபதி டட்டமேறியதாகவும் இவ்விருவரது ஆட்சிக்காலம் சுமார் ஆறு மாதங்கள் மட்டும் நீடித்தாக இராமநாதபுரம் சமஸ்தான மான்யுவல் தெரிலிக்