பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.4 எ ஸ். எம் கமால் - தில் ஈடுபட்டு இருந்தனர் என்பதை அந்தக்கோயிலின் கி.பி. 1531, கி,பி. 1545ம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்ற றனர். இத்தகைய வணிக வளர்ச்சியின் தொடர்பாக இந்தச் செப்பேடு விளங்குகிறது. இந்த துறைமுகத்தில் தீர்வைப்படுகிற அனைத்துப் பொருள்மீதும், கீழக்கரை மீனாட்சி சொக்கநாதசுவாமி ஆலய ஸ்தானிகர் தேவேந்திர பட்டர் குமாரர். இராமலிங்க குருக்களுக்கு மகமை ஏற்படுத்திக் கொடுக்கும் உரிமைப்பட்டயம் இது. இங்கு வந்து கரை இறங்குகிற, ஏற்றுமதி செய்யப்படுகிற கீழ்க்கண்ட பொருட்களுக்கு செப்பேட்டில் கண்டுள்ளவாறு தீர்வை வசூலித் துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தது. தீர்வைக்குரிய பொருட்கள் :1) தவசம் (நவதானியங்கள்) 2) நெல், 3) அரிசி 4) பாக்கு 5) மிளகு 6) பலசரக்கு 7) செம்பு 8) துத்தநாகம் 9) பட்டுப் புடவை 10) பன்னிர் 11) ஏலம், 12) கிராம்பு, 13) சாதிக் காய் 14) சாதிப்பத்திரி 15) பட்டுநூல் 16) கருப்புக்கட்டி 17) பினாட்டு 18) புளி 19) கருப்புக்கட்டி கொட்டான் 20) கொட்டைப்பாக்கு 21) தேங்காய் 22) சங்கு. இந்தப்பட்டியலில் மடிச்சீலை (துணி) விடுபட்டுள்ள காரணம் தெரியவில்லை. ஒருவேளை நெசவுத்தொழிலை ஊக்கு விப்பதற்காக ஏற்றுமதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்திருக்கலாம். ஏனெனில் இங்கு அராபிய முஸ்லீம்கள் 12வது நூற்றாண்டில் குடியேறத் தொடங்கியதில் இருந்து அவர்களது கடல் வணிகத்துடன் நெசவுத் தொழில் இங்கு வளர்ச்சியடையத் தொடங்கியது. இந்த ஊரின் கடல்துறையை அடுத்துள்ள பகுதி பஞ்சு வணிகர்களது இருப்பிடமாகியது. இன்றும் இந்தப்பகுதி பேரூராட்சிப் பதிவுகளின்படி பருத்திக்காரத் தெரு என வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இந்தப் பகுதியில் டச்சுக்காரர்கள், சேதுபதி மன்னர் அனுமதியின் பேரில் நெசவு பட்டறை ஒன்றை நடத்தி வந்தனர். தெற்குத் தெருவில் ஏராளமான தறிகள் இருந்தன. இங்கும், இந்தப்பகுதியிலும் 1. Д. R. 396 — 1 907 Α. R. 348 - 19Ο 7