பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் .ெ சப்பேடுகள் 5 தமிழக படையெடுப்பினால் மதுரை பேரரசு ந லிவடைந்த நிலையில், சேதுபதிகள் தங்களை தன்னரசு மன்னர்களாக மாற்றிக் கொண்டனர் என்பதும் தெரியவருகிறது. இந்த ஆவணச் செய்திகளை சேதுபதி மன்னர் வழியினரது ஆய்வுக்கு தொடர்புடையதாக எடுத்துக் கொண்டால், இந்த வழியினர் சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு குடிபுகுந் தவர்கள் என்ற கருத்தும் உறுதிப்படுத்தப்படுகிறது. அத்துடன் அவர்கள் சோழப் பேரரசர்களின் பணியில் இருந்து பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதியான கானாட்டில் முதலில் நிலைத்து இருந்தனர் என்பதும் பெறப்படுகிறது. ஆனால் அடுத்த இரு நூற்றாண்டுகளில் அவர்களது அரசியல் பணி காரணமாகவும், பாண்டிய நாட்டு குழப்பங்கள் காரணமாகவும் சேதுபதி மரபினர் கானாட்டில் நீடிக்க இயலாமல் இன்னும் தெற்கே பாண்டிய நாட்டு கிழக்கு கடற்பகுதிக்கு குடிபெ பர்ந்த னர் என்பதும் ஊகிக்கப்படுகிறது. என்றாலும் , மறவர்களது குடியேற்றம் கானாட்டில் தொடர்ந்ததை சில வரலாற்றுச் செய்திகள் வலியுறுத்துகின்றன. அங்கே குடியிருந்த காாாளர்கள் தங்களது உதவிக்காக ராஜே ந் திர மங்கலநாட்டு மறவர் ஐநூற்றுவரை தங்களது நாட்டில் குடி யமர்த்தினர் என்பதை புதுக்கோட்டை சீமை வரலாறு உறுதிப் படுத்துகிறது. மற்றொரு செய்திப்படி அந்த மறவர்கள் சேது மன்னருடன் மணவினை கொள்ள மறுத்து கானாட்டில் குடி யேறினர் என்பதும் தெரியவருகிறது. இந்தக் குடியேற்றம் பதினான்காம் நூற்றாண்டிற்கும் முந்தியது எனக் கருதப்படு கிறது. மேலும் காரணம் எதுவாக இருந்தபொழுதும் கானாட் டில் மறவர்கள் ஆங்காங்கு நிலைகொண்டிருந்ததை பன்னிரண்டு பதிமூன்றாவது நூற்றாண்டுக் கல்வெட்டுச் செய்திவழி அறிந்து கொள்ளமுடிகிறது. இதனை கி.பி. 1478-ம் ஆண்டு குழபிறைச் செப்பேடும் உறுதி செய்கிறது. இந்தச் செப்பேட்டில் மறவர்கள் 9) Pudokottai Manual - K. Venkatrama Ayyar ( 1928) 10). Venkatrama Ayyar K. Pudukottai Manual ( 1928) 11) Pudukottai State Iriscriptions. No. S. 218, 644. 639, 501, 505, 5 5 4 .