பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 எஸ். எம். கமால் --- இந்தச்செப்பேடு வழங்கப்பட்ட காலத்தில், இராமேசுவரம் திருக்கோயில் பணிகளை நிறைவேற்றுவதற்காக இருந்த ஆதின கர்த்தர் பணி இடம் தொடர்ந்து ஏதோ ஒரு காரணத்தினால் காலியாக இருந்திருக்க வேண்டும். என ஊகிக்கப்படுகிறது. அத்துடன் சைவபண்டாரத்தைவிட வடமொழி ஆகமங்களில் வல்ல ஆரிய குருக்கள், முறையாக மன்னரது கட்டளைகளை செயல்படுத்துவார் என்ற நம்பிக்கையிலும் சேதுபதி மன்னர் ரெகுநாத குருக்களை, மேலே கண்ட திருக்கோயில் பணிகளை நிறைவேற்ற நியமனம் செய்து இருக்க வேண்டும்.