பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 30 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : ரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : இளமனுார் சோளகை சேர்வைக் காரன் 3. செப்பேட்டின் காலம் : சகம் 1609 பிரபவ ஆண்டு ஆனி மாதம் (கி பி- 15-6-1687) 4. செப்பேட்டின் பொருள் : மேலே கண்ட சேர்வைக்கார னுக்கு மலங்கரை கிராமம் தானம் இந்தச் செப்பேட்டில் ரெகுநாத சேதுபதி மன்னரது விருதா வளியாக முப்பத்துமூன்று சிறப்புப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந் தாலும் சாகித்ய சம்பரம், சகாதேவ குமணன் என்ற இரண்டு சிறப்புப் பெயர்கள் மட்டும் புதியன. இசையின்பால் மன்னருக்கு உள்ள ஈடுபாட்டையும் அவரது கொடைச் சிறப்பையும் குறிப் பிடும் புகழ்ச்சிப் பெயர்களாக இவை உள்ளன. இந்தச் செப்பேட்டின் காலம் சகம் 1500 என குறிப்பிட் டிருப்பது பஞ்சாங்கக் கணக்கிற்குப் பொருத்தமானதாக இல்லை. இதில் உள்ள பிரபவ ஆண்டிலிருந்து இந்தச் செப்பேட்டின் சரி யான காலம் சகம் 1609 எனக் கொள்வது பொருத்தமாக உள்ளது. மதுரைச் சீமை சின்ன இளமனுாரிலிருந்த சோளகைச் சேர்வைக்காரன் கொண்டோடிக்காரி என்ற தனது மனைவியுடன் இராமநாதபுரம் மன்னரது மாளிகை ஊழியர்களுக்கு தலைவியான தானாபதி பதவியும் சேர்வைக்காரனுக்கு பாளையப்படு பதவி