பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 எஸ். எம். கமால் கானாட்டில் கள்ளரிடையே மிகுந்த செல்வாக்கு மிக்கவராக இருந்த ரெகுநாதராய தொண்டைமானையும் அவரது சகோதரர் நமனத் தொண்டைமானையும் இராமநாதபுரத்திற்கு வர வழைத்து மறவர் சீமையின் தளகர்த்தர் பதவியினை வழங்கியவர் இந்தச் சேதுமன்னர் என்பது வரலாறு. அந்தச் செய்தி வழி இந்தச் செப்பேடும் அமைந்துள்ளது. பூரீஇராமஜெயம்: ' என்ற மங்கலச் சொல்லுடன் தொடங் கும் இந்தச் செப்பேடு எளிய உலகியல் நடையிலான எழுபது வரிகளுடன் 'இராமநாதன் துணை' என்ற சொல்லுடன் முடிக்கப்பட்டிருப்பது மன்னரது இறை பக்தியை எடுத்துக்காட்டு வதாக உள்ளது. வரி 16ல் துரை என்ற திசைச்சொல் இடம் பெற்றுள்ளது. பெரும்பாலும் இந்தச் சொல் போர்த்துக்கீசிய மொழிச் சொல்லாக இருக்கவேண்டுமென நம்பப்படுகிறது. சேது ஆதிக்கம் அரண்மனைவாசல் ஊழியம், சமூகம், தானாதிபதி, உம்பளம், சம்பளம், ஒடுக்கி, கொத்துக் கணக்கு என்ற சொற்கள் இந்தச் சீமைக்கே உரிய வட்டார வழக்குகள் ஆகும்.