பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் -- a-- = * 7 மேலும், இந்த ஊருக்கு அருகில் உள்ள ரெகுநாதபுரம், சேதுபதிகளது கோநகர்களின், ஒன்றாக இருந்தது என இராமநாதபுரம் மானுவல் குறிப்பிடுவதையும் தில்லி படை யெடுப்புடன் இதனை தொடர்புப் படுத்திச் சிந்திப்பதற்கு ஏதுவாக உள்ளது. இந்தக் கருத்துக்கு ஆதாரமாக இராமேசுவரம் திருக் கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் பதினைந்தாவது நூற்றாண் டில் சேதுபதி திருப்பணிகளைக் குறிக்கின்றன. இராமேசுவரம் திருக்கோயில் அமைப்புமுறைகளை ஆராய்ந்த டாக்டர் பெர்குசன் இந்தக் கோயிலின் கர்ப்பக்கிரகம், உடையான் சேதுபதியால் பதினைந்தாவது நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனக்கருத்து தெரிவித்துள்ளார். அந்தக் கோயிலின் பிரதான அமைப்பை உருவாக்கிய உடையான் சேதுபதியின் கி.பி 1414ம் வருட கல்வெட்டினையும் கோயிலின் திருச்சுற்று மதிலை நிர்மானித்த சேதுமன்னரைப் பற்றி கி.பி. 1434-ம் ஆண்டுக்கல் வெட்டினையும் அவர் தமது கருத்துக்கு ஆதாரமாக குறிப்பிட்டுள் ளார் அந்தக் கோயிலின் நித்ய பூஜைக்கு சேதுபதி மன்னர்கள் கி.பி. 1414, 1434, 1490 ஆண்டுகளில் வழங்கிய நிலக்கொடை பற்றிய செய்திகளைச் சுட்டும் இராமேசுவரம், கல்வெட்டுக் களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். . மேலும் இராமேசுவரத்தின் எதிர்க்கரையான யாழ்ப்பாண நல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலயத்திற்கு சேதுபதி மன்னர் மூலமாக இராமேசுவர வேதவிற் பன்னர் சிலரை வரவழைத்து அர்ச்சகராக நியமனம் செய்யப் பட்டதை இதே நூற்றாண்டில் வரையப்பெற்ற 'கயிலாய மாலை என்ற சிற்றிலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளது." 15) Rajaram Rao. T. Manual of Ramanathapuram Samas thanam (1881) pр 16) Fergusson - History of India and Eastern Architecture рр 384–85 17) James Burgess J.E. Tracy - Indian Antiquary vol. XII Page : 137. 18) Thurston – Castes and Tribes of South India vol p. 126 19) Sashasari. K. Dr – History of Sethupathies (1972) pp 18