பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 o' எஸ். எம். கமால் தில் இந்த மன்னர் சிறந்து விளங்கிய காரணத்தினால், முந்தைய சேது மன்னர்களுக்கு இல்லாத கூடுதல் அளவிலான சிறப்பு பெயர்கள் இந்தச் செப்பேட்டில் காணப்படுகின்றன. இராமேசுவரம் திருக்கோயி லுக்கு அபிஷேக கட்டளைக் காக இராசசிங்க மங்கலம் கிராமத்தில் சேதுபதி மன்னர் நிலக் கொடை வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இராசசிங்கமங்கலம் கிராமம் இன்றைய இராமநாதபுரம் மாவட் டத்தில் திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இந்த ஊர் பாண்டிய மன்னர் ஆட்சியில் வரகுண வளநாடு என்ற நிலக்கூற்றில் அமைந்து இருந்தது. மன்னன் இராசசிம்மன் (கி.பி. 900-920) பெயரால் ஏற்பட்ட மங்கலம் இந்த ஊர். அங்குள்ள நீர்த்தேக்கம் உலப்பில் ஒதவொலிகடல் ஒடுங்கு முன்னந்தானமைத்த இராசசிங்கபெருங்குளம்' என சின்னமனூர் செப்பேட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. பாண்டியர்வாரிசுப் போரில் பராக்கிரம பாண்டியனுக்கு உதவுவதற்காக கி.பி. 1170ல் வந்த இலங்கைப் படைகள், போரினால் நாசமடைந்த இந்தக் கண் மாயைச் செம்மைப்படுத்தியதாக இலங்கை வரலாறு சொல் கிறது. இராநாதபுரம் சீமையைச் சேர்ந்த மிகப்பெரிய இந்த நீர்த்தேக்கம் நாற்பத்து எட்டு போக்கு மடைகளைக் கொண் டிருந்ததை நாரை பறக்காத நாற்பத்து எட்டுமடை ...... என நாடோடிப்பாடல்கள் புகழ்ந்து பாடுகின்றன. இந்த தீர்த்தேக் கத்தினால் இந்தப்பகுதி குடிமக்கள் விவசாயத்தில் சீரும் சிறப் பும் பெற்று இருந்தனர். இந்தப்பகுதி இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது தானியக் களஞ்சியம்' எனக் கருதப்பட்டு வந்தது. இந்த தேக்கத்தில் இருந்து பாசனப்பகுதிக்கு நீரை எடுத்துச் செல்ல உதவும் வாய்க்கால்களின் தொடக்கம், ரகுநாத மடை, இராமனாதமடை, பிள்ளைமடை என்பன போன்று பெயர் சூட்டப்பட்டு இருந்தன. இவைகளின் எட்டுமடைப்பாசனத்தில் உள்ள நஞ்சைநிலம் அனைத்தையும் திருமலைரகுநாத சேதுபதி 1. இராசசிம்ம பாண்டியன் மெய்க்கீர்த்தி - சின்னமனுார்ச் செப்பேடு 2. Krishnasamy Iyeangar Dr. S. South India and Her Mohammaden Invacers (1921) p 6.