பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 34 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு பெற்றவர் : இராமேஸ்வரம் பூரீ இராமநாத சுவாமி திருக்கோயில் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1613 பிரஜோற்பதி ஆண்டு (கி.பி. 13-7-1691) 4. செப்பேட்டின் பொருள் : இராமேசுவரம் அன்னதான மடத்துக்கு நல்லுக்குறிச்சி கிரா மம் தானம் இந்த செப்பேட்டை வழங்கிய கிழவன் என்ற ரெகுநாத சேதுபதியின் விருதாவளியாக இந்தச் செப்பேட்டில் ஐம்பத்து ஒன்பது சிறப்புப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பரத நாடக பக்திப் பிரியன் என்ற சிறப்புப் பெயரைத் தவிர ஏனையவை இந்த மன்னரது முந்தைய செப்பேடுகளிலும் அவரது முன் னோர்களது பட்டயங்களிலும் பயிலப்பட்டவையாகும். இந்த மன்னரது வெற்பு நிகர் வீரத்திற்கு இணையாக அவரது பக்தி உணர்வும் கலைகளில் ஈடுபாடும் இருந்ததை இந்த அடை மொழி உணர்த்துகிறது. குறிப்பாக இராம காதையில் இந்த மன்னருக்கு உள்ள ஈடுபாட்டைக் குறிப்பதே இந்த சிறப்புப் பெயர். இந்த மன்னரது சமகாலத்தவரான தஞ்சை ரெகுநாத நாயக்கரும் (கி.பி. 1700 - 30) மிகச்சிறந்த இராமபக்தராக விளங்கினார் என்பதையும் அவருக்கும் அணவரதராமகதாம்ருத சேவகன்' என்ற விருது இருந்தது தெரிகிறது.