பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 எஸ் எம் . கமால் இந்தப் பட்டயத்தின் தொடக்கத்தில் முதன்முறையாகக் கொல்லம் ஆண்டு 1133 என கொடுக்கப்பட்டுள்ளது. மறவர் சீமை யில் அந்த ஆண்டு முறை அப்பொழுதுதான் வழக்கிற்கு வந்து இருந்ததை இந்தப் பிரயோகம் பிரதிபலிக்கின்றது. ஆனால் இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு தவறாக உள்ளது. ஏன் எனில் கொல்லம் ஆண்டு தொடக்கம் என்பது கிறித்துவ ஆண்டு கி.பி.825 க்கு சமமானது. இந்தச் செப்பேடு கி.பி 1691ல் வழங்கப் பட்டிருப்பதால் இந்த செப்பேட்டிற்கான கொல்லம் ஆண்டு 866 என இருத்தல் வேண்டும். இத்தகைய பிழைகள் இந்தச் செப் பேட்டின் 34, 35வது வரிகளிலும் காணப்படுகின்றன. இராமேசுவரத்திலுள்ள அன்னதான மடத்திற்கு இந்த மன்னர் நல்லுக்குறிச்சி என்ற ஊரினை உடலாக வழங்கியுள் ளதைக் குறிப்பிடுகின்றது இந்தச் செப்பேட்டின் வாசகம். இந்த ஊர் இன்றைய இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துர் வட் டத்தில் அமைந்துள்ளது. ஆனால் குறிப்பிடப்படும் அன்னதான மடம் இராமேசுவரம் நகரில் எங்கு இருந்தது என்பது தெரிய வில்லை. ஏற்கனவே இராமேசுவரம் மேலரதவீதியில் அமைக் திருந்த மன்னரது அரண்மனையையொட்டி அமைந்திருத்தல் வேண்டும். இன்று அந்த அரண்மனையும் இல்லை. அன்ன சத்திரமும் இல்லை.