பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 O எ ஸ் எம் கமால் கோயில்களுக்கு விட்டுக் கொடுத்திருப்பதை திருமலை ரெகுநாத சேதுபதியின் செப்பேட்டில் முன்னர் கண்டோம். வரலாற்றுக்குப் புதுமையான இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ரெகுநாத கிழவன் சேதுபதியும் மேற்கொண்டார் என்பதே இந்தச் செப்பேட்டின் செய்தியாகும். இந்தச் செப்பேடு வழங்கப்பட்ட ஆண்டு (கி.பி. 1797)ல் மன்னார் பகுதியில் முத்துச்சலாபம் நடைபெற்றதும் இங்குக் குறிப்பிடத்தக்கது." மேலும் திருப்புல்லாணி த் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்திருநாள் அன்று பெருமாளுக்கு திருத் தேர்விழா நடைபெற்று வந்ததையும் இந்தச் செப்பேடு தெரிவிக் கின்றது. இந்தச் செப்பேட்டுத் தானம் ஆதி சந்திராதித்தியர் உள்ள வரை க்கும் வழங்கப்பட்டிருப்பதாகக் குறிக்கப்பட் டுள்ளது. ஆனால் இந்தச் செப்பேடு வழங்கிய ஒரு நூற்றாண்டு காலத்திற்குள் சேதுபதி மன்னர் ஆட்சியையும் மன்னார் சலாப முத்துக்குளிக்கும் உரிமையையும் ஆங்கிலேயர் ஒழித்துவிட்டனர். 'இந்த தர்மத்திற்கு அகிதம் செய்தவர்கள் என்று தொடரும் பழியினை ஆங்கிலேயர் பொருட்படுத்தவில்லை. கீழை நாட்டு மக்களது அற உணர்வுகளை மதிக்கும் சுபாவம் அவர் களுக்கு இல்லையென்பதையே அவர்களது இந்தச் செயல் புலப் படுத்துகிறது. - 1. Hornell – The Indian Pearl Fisheries of the Gulf of Mannar and Palk bay (1910) Page. 46