பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்துவிஜய ரகுநாத சேதுபதி (கி.பி. 1710 - 1728) மறவர் சீமையின் மகோன்னத ஆட்சியாளராக விளங்கிய கிழவன் என்ற ரெகுநாத சேதுபதி கி.பி.1710ல் இறந்தார். அவருக்கு ஆண்வாரிசு இல்லாததால் அவரது தங்கை உடையக் காளின் மகனான திருவுடையாத் தேவர் சேது மன்னராகப் பட்டம் சூடினார். இராமநாதபுரத்தில் ஆண்டுதோறும் புரட்டாசித் திங்களில் எடுக்கப்பெறும் நவராாத்திரி விழாவின் இறுதி நாளான தசரா எனப்படும் விஜயதசமி அன்று இவர் முடிசூடிக் கொண்டதால் முத்து விஜய ரெகுநாத சேதுபதி என அழைக்கப் பட்டார். இவரது தந்தை கடம்பத்தேவர் என்றும் தாயார் உடையக்காள் என்றும் தெரிய வருகிறது. இவரது ஊர் திருவுத்தர கோசமங்கை என்பதை இன்னொரு செப்பேடு மூலம் அறியலாம். திருமலை சேதுபதி கிழவன் சேதுபதி போன்றோரின் ஆட்சியைப் போல இந்த மன்னரது ஆட்சியும் நீண்டதாக அமையாவிட்டாலும், பல சிறந்த சாதனைகளின் பட்டியலாக