பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 3.43 பெரிய சிவத்துரோகமாகக் கருதி அவருக்கு மரண தண்டனை வழங்கினார். மனு நீதிச் சேதுபதியாகவும், சிவநீதிச் செல்வ ராகவும், வரலாறு படைத்த இந்த மன்னரது இறுதி ஆண்டுகள் தஞ்சை மராத்திய மன்னருடன் போரிடுவதில் கழிந்தன. அறந் தாங்கிப் போரில் முனைந்திருந்த பொழுது இவர் நோயுற்று கி.பி.1728ல் மரணமடைந்தார். பல பட்டடை சொக்கநாதப்புலவர் இந்த மன்னர் மீது பணவிடு துாது என்ற சிற்றிலக்கியத்தைப் பாடியுள்ளார். இதே புலவர் பாடியுள்ள தேவை உலாயிலும், இந்த மன்னரது இராமமேசுவரம் திருக்கோயில் பணிகளைப் புகழ்ந்து போற்றி யுளளாா.