பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 43 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துவிஜய ரெகுநாத சேதுபதி காத்ததேவர் 2. செப்பேடு பெற்றவர் : திருப்பெருந்துறை ஆத்மனாத சுவாமி திருக்கோயில் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம், 1651 . செள மிய ஆண்டு சித்திரை மாதம் 16ந் தேதி (13-4-1728) " 4. செப்பேட்டின் பொருள் : மன்னார் முத்துச் சலாபத்தில் முத்துக் குளித்துக் கொள்ளும் உரிமை. இந்தச் செப்பேட்டை வழங்கிய முத்து விஜயரெகுநாத சேதுபதியின் விருதாவளியாக எழுபது சிறப்புப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளில் மூன்று விருதுகள் மட்டும் புதியன. வீரமார்க்கன். பரதநாடக விற்ப்பன்னன், ஜெகராஜர் பணிகின்ற செம்பிவளநாடன் என்பன அவை. இவரது முந்தைய செப்பேடுகளிலும் இவரது மூதாதையரான சேதுபதிகளது செப் பேடுகளிலும் இந்தச் சிறப்புப் பெயர் காணப்படவில்லை. சேதுபதி மன்னர்களுக்கு மன்னார் முத்துசலாபத்தில் உள்ள உரிமை பற்றி ரெகுநாத திருமலை சேதுபதி, ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னர்களின் செப்பேடுகளில் முன்னர் கண்டோம். இராமேசுவரம் திருக்கோயிலுக்கு இதே முத்துவிஜய ரெகுநாத சேதுபதியும் முத்துச் சலாபத்தில் உரிமை வழங்கி செப்பேடுகள் அளித்துள்ளனர். இந்தச் செப்பேட்டின்படி திருப்பெருந்துறை f Assi vol II (1884) p. 224