பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 - எஸ். எம் . கமால் SSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSS ஏற்கெனவே இந்த மன்னர் சாக்காங்குடி, பட்டப்புல்லான் என்ற இரு கிராமங்களை வழங்கியிருந்த பொழுதிலும் அன்றாட கட்ட ளைக்கு அவைகளின் வருவாய் போதுமானதாக இல்லாததினால் இந்தப் பட்டயத்தின் மூலம் காராம்பலையும் தானமாகக் கட்ட ளையிட்டுள்ளார். இந்த ஊர் இராமநாதபுரம் வட்டத்தில் வைகையாற்றின் வடகரையில் காரேந்தல் என்ற பெயருடன் இருந்து வருகிறது. இந்த மன்னரது விருதாவளியாக அறுபத்து இரண்டு சிறப்புப்பெயர்கள் இந்தப்பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சகல குனாராமன் மதுரையார் ஆபத்சகாயன் என்ற இரண்டு பெயர்கள் மட்டும் புதியனவாக உள்ளன தானம் வழங்கப் பட்டுள்ள காராம்பலின் நான்கு எல்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொருவலுTர், சான ரேந்த ல், காவனு க், தொண்டாரேந்த ல் , புல்லங்குளம், அச்சடி பிரம்பு ஆகியவை இன்னும் வழக்கில் உள்ளன. புல்லன்குளம் மட்டும் புல்லன்குடியாகத் திரிபு பெற்றுள் ளது. இந்த ஊர்களின் பிற நான்கெல்கை புரவு என்றும் சிறிய அளவிலான வயலை தட்டு என்றும் குறித்திருப்பது இந்த வட்டார வழக்குகள் ஆகும்.