பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 52 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : குமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதிகாத்த தேவர் 2. செப்பேடு பெற்றவர் : இராமநாதபுரம் நகர் ஈசா பள்ளிவாசல் 3. செப்பேட்டின் காலம் சாலிவாகன சகாப்தம் 1656 ஆனந்த வருடம் தைமீ" 1ந்தேதி 4. செப்பேட்டின் பொருள் பள்ளிவாசல் அன்னதானக் கட் டளைக்கு நிலக்கொடை இந்தக் கொடையினை வழங்கிய குமாரமுத்து விஜய ரெகுநாத சேதுபதி அவர்களது விருதாவளியாக அறுபத்து ஒன் பது சிறப்புப் பெயர்கள் இந்தச் செப்பேட்டில் காணப்படுகின்றன. 'அந்தம்பரக் கண்டன்’ (வரி 16) என்ற ஒரே ஒரு விருது மட்டும் இங்கு புதுமையாகப் புகுத்தப்பட்டுள்ளது. ஏனையவை இவரது முந்தையோரும் இந்த மன்னரும் தங்களது முந்தையப் பட்டயங் களில் பயன்படுத்தியுள்ளவை. இந்த அறக்கொடையைப் பெற்ற ஈசா பள்ளிவாசல் என்ற அமைப்பு இராமநாதபுரம் கோட்டை என வழங்கப்படுகின்ற இராமநாதபுரம் நகராட்சிப் பகுதி பெரிய கடைத் தெருவின் வடக் குப் பகுதியில் உள்ளது ஆகும். ஈசா சாஹிபு என்ற இறையருட் செல்வர் பள்ளிவாசலை ஒட்டி அடக்கம் பெற்றுள்ளார். இந்தப் புனித இடத்திற்கு வருகை தருகின்ற ஆன்மிக பெருமக்களுக்கு அன்னம் வழங்குவதற்காக இந்தச் சேதுபதி மன்னர் கிழவனேரி என்ற ஊரினை அறக்கொடையாக ஆணை இட்டபட்டயம் இது.