பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்யாவாசஸ்பதி சிலை மீட்ட செம்மல் டாக்டர் இரா. நாகசாமி இயக்குநர் பெசன்ட் நகர், தொல் பொருள் ஆய்வுத் துறை (ஒய்வு) சென்னை 90 அணிந்துரை இந்நூலாசிரியர் டாக்டர் எஸ். எம். கமால் அவர்கள் தமிழ் வரலாற்றில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு புதியவரல்லர். பலவரலாற்று நூல்களைப் படைத்து புகழ் கொண்டவர். கமால் அவர்களின் நூல்களில் வரலாறு மிளிறும்; தமிழ் மிளிறும்; இனிமை மிளிறும். விருப்பு வெறுப்பின்றி, சமநோக்கும் பொது நோக்கும் கொண்டு, வரலாற்று நெறி பிறழாது எழுதும் மரபு கொண்டவர். தாம் கூறும் கருத்துக்களுக்கு தக்க சான்றுகளை மேற்கோள்களாகக் காட்டி. தம் நூலை என்றும் நிலைத்து நிற்கும் அடிப்படைச் சான்று நூலாக ஆக்குவதில் கண்ணும் கருத்து மாக திகழ்பவர். பல பல்கலை கழகப் பேராசிரியர்களும். ஆராய்ச்சி மாணவர்களும் தேடித்திரட்ட வேண்டிய சான்று களை செய்திகளை தனியொரு மனிதராக சேகரித்து பேராசிரி யர்களும் போற்றும் வண்ணம் தமது நூலைப் படைப்பவர் கமால் அவர்களின் நூல் என்றாலே தரமான நூல். உடனடி யாகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் துண்டும் வகை யில் எழுதுபவர். பல வரலாற்று நூல்கள் சுவையின்றி சப்பென்று இருக்கும். ஆனால் கமால் அவர்களின் எழுத்தில் ஓர் சக்தி உண்டு. அச் சக்தி ஆக்கசக்தியாக மலருமே ஒழிய அழிவு சக்தியாக இருக்கவே இருக்காது. ஆதலின் தான் இவரது படைப்புகளில் பெரும்பாலானவை பரிசும் பாராட்டுகளும் பெற்றுள்ளன. எடுத்துக் காட்டாக விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் என்ற நூலைப் பார்த்தாலே நான் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துக் கருத்துக்களும் மிகையல்ல என்பது தெளியலாம்.