பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 29 - --- - நாட்டான், கிராமத்து அசேச வித்வ மகாஜனங்களுக்குமாக (செ. எண் 62) மூடிறு செப்பேடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனைப் போன்றே இராமேசுவரம் அன்னதான மடம், திருப்பெருந்துறை மடம், திருவாவடுதுறை மடம் இராமநாதபுரம் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் சுந்தரபாண்டிய பட்டணம் அக்கிரகாரம் ஆகியவைகளுக்கும் கொடையினைப் பெறுபவரது பெயர் குறிப் பிடப்படாமல் நிறுவனங்கள் பெயரால் வழங்கப்பட்டுள்ளன. இவ்விதம் தானம் கொடுக்கப்பட்ட ஊர்களது அமைப்பு அதற்கான எல்லைகள் தெளிவாக இடம் பெற்றுள்ளன. இவை கள் அமைந்திருந்த முந்தைய நாட்டமைப்புகள் போன்ற செய்திகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஊர்களுக்கான பெருநான் கெல்லைகள் துலக்கமாக கொடுக்கப்பட்டுள்ள போதிலும், அன்றைய நிலையில் நிலங்கள் முழுவதும் அளவை செய்யப்பட்டு நிகுதி செய்யப்பட்ட நிலையில் இல்லை என்பதும் தெரிய வரு கிறது. குலப்பிரமாணம்' என்ற அளவை முறை மட்டும் அப் பொழுதிருந்ததால் நான்கெல்லைகளாக நஞ்சை, புஞ்சை, திட்டு திடல் தோப்பு, ஆறு, குளம் என்று மட்டும் குறிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் முந்தைய மன்னர்களும் அவர்களது அலுவலர் களும் மக்களது நன்மைக்காக அமைந்த ஆ ) , கண்மாய் கால்கள், கோயில்கள், மடங்கள், பள்ளி வாசல்கள், சமணப் பள்ளிகள் ஆகிய வைபற்றிய செய்திகளும் இந்த நான்கெல்லை களிலிருந்து கிடைக்கின்றன, மேலும் குழிக்கல், குத்துக்கல் எல்லைக்கல். சக்கரக்கல் ஆகியவைகளையும், ஆலமரம், அரச மரம், புளியமரம், பழைய கோட்டை, அரண்மனை, மக்களது பயன்பாட்டிலிருந்த பெரு வழிகள் ஆகியவைகளும் இந்த எல்லை களாக இடம் பெற்றுள்ளன. இந்தப் பெருவழிகளில் (1) சேதுப் பாதை (2) இராமநாதபுரம் பாதை (3) உப்புப்பாதை (4) பண்ணந்தை பாதை (5) பனையூர் பாதை (6) புத்துனர் பாதை (7) தத்தங்குடி பாதை என்பன சில, இந்தச் செப்பேடுகள் குறிப்பிடப்படுகின்ற. எல்லையில் உள்ள ஊர்கள் இணைப்பு ஆ’ வில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தச் செப்பேடுகளை வழங்கியதில் சேதுபதி மன்னர்கள் சிறப்பான நான்கு மரபுகளைக் கையாண்டு வந்துள்ளனர். முதலாவதாக அந்த மன்னர்களது தலைமை இடமாகப் புகலூர், இராமேசுவரம், இராமநாதபுரம், ஆகிய நகர்கள் வெவ்வேறு