பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 எஸ் எம். கமால் _ காலங்களில் வெவ்வேறு மன்னர்களது கோநகர்களாக அமைந் திருந்தன என்பது இராமநாதபுரம் சீமை வரலாறு. ஆனால் அவர்கள் வழங்கிய செப்பேடுகள் அனைத்திலும் துகலுர் கூத்தத்து குலோத்துங்க சோழநல்லூர்க் கீழ்பால் விரையாத கண்டனிலிருந்து வழங்குவதாகக் குறிப்பிட்டுத் தங்களது பூர் ஆர்த ஊரின் நினைவைப் பெருமையுடன் போற்றி வந்திருப்பது. இரண்டாவது : கூத்தன் சேதுபதிக்கும். (கி.பி. 1622-33) அவரை அடுத்துச் சேதுமன்னர்களாகப் பட்டம் ஏற்றவர்களுக் கும் ஆண் வாரிசு இல்லையென்பது வரலாற்று உண்மை. என்றாலும் இவர்களது மிகப் பெரும்பாலோர் வழங்கிய செப் பேடுகளில் அவர்களது இயல்பான தந்தையின் பெயரைக் குறிப் பிடாமல் அவருக்கு முன்னர் சேதுபதியாக அரசோச்சிய மன்ன ரது புத்திராாகவே அவர் சளைக் குறிப்பிட்டு வந்திருப்பது. மூன்றாவது : பதினான்காவது நாற்றாண்டு முதல் தமிழ் மண்ணில் தொடர்ந்த அன்னியர் ஆட்சியினால் நமது தாய் மொழியாகியதமிழுக்கப் பல இடையூறுகள் ஏற்பட்டு தமிழ் மொழி யின் பெருமையும் பயிற்சியும், குன்றியிருந்தபொழுது தமிழைப் போற்றிப் புரந்த தமிழ் மன்னர்கள் சேதுபதிகள். அவர்களது ஆவணங்களான செப்பேடுகளில் குறிப்பாக, திருமலை சேதுபதி, ரெகுநாத கிழவன் சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி, ஆகியோர் தங்களது கையொப்பத்தை தெலுங்கு மொழியில் எழுதி கைச்சாத் திட்டிருப்பது. திருமலை ரெகுநாத சேதுபதிக்கும் மதுரை மன்ன்ர் திருமலை நாயக்கருக்கும் மிக நெருக்கமான நட்பும் தொடர்பும் இருந்தன. ஆதலால் அவர் தெலுங்கில் கையொப்ப மிட்டிருப்பதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மதுரை யுடன் இருந்த உறவுகளை முற்றாக முறித்துக்கொண்டவர் ரெகுநாத கிழவன் சேதுபதி. இந்த மன்னருக்கு ஒரு நூற்றாண்டு காலம் பிந்தியவர் முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி. தமிழ்க்கடலான மீர் ஜவ்வாது புலவர் போன்ற பெரு மக்களை அரசவைக் சவிஞ ராசக் கொண்டிருந்தவர் இந்த மன்னர். ஆதலால் இவரும் இவரது முன்னவரும் தமிழ் மொழிச் செப்பேடு களில் தெலுங்கு மொழியில் ஒப்பமிட்டிருப்பது விடைகாண இயலாத விந்தையாக உள்ளது. வழிவழியாக வந்துள்ள ரொமநாதபுரம் அரண்மனை மரபைத் தொடர்ந்து பேன வேண்டுமென்ற பேரவாவாக இருக்கலாம். எனக்கொள்வதைத் தவிர வேறு இல்தை.