பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/585

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 74 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துராமலிங்க விஜயரெகு நாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : இராமசிவன் புத்திரன் சுப்பிர மணிய அய்யன் 3. செப்பேட்டின் காலம் : சகம் 1704 சோபகிருது வைகாசி மாதம் (கி. பி. 13-05-1782) 4. செப்பேட்டின் பொா ஸ் : குளப்பட் கிராமதானம். 1- り கு sh- ] இந்தச் செப்பேட்டை வழங்கிய முத்துராமலிங்க சேதுபதி மன்னரது விருதாவளியாக நாற்பத்து நான்கு சிறப்புப் பெயர்கள் இந்தச் செப்பேட்டில் பொறிக்கப்பட்டு உள்ளன. இவையனைத் தும் இந்த மன்னரது முந்தைய செப்பேடுகளில் காணப்பட்டவை. குளப்பட்டியின் பாதிப் பகுதியை யஜுர் வேத விற்பன்ன ரான சுப்பிரமணிய அய்யருக்கு பூதானமாக வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த ஊரின் இன்னொரு பகுதி ஏற்கெனவே தேவதாயமாகவோ, பிரம்மதாயமாகவோ, வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஊகிக்கப்படுகிறது. ஐம் பத்திரண்டு வரிகளைக் கொண்ட இந்தச் செப்பேட்டின் இறுதி ஏழு வரிகளில் சமஸ்கிருதச் சுலோகம் இடம் பெற்றுள்ளது. இந்த ஊர் பரமக்குடி வட்டத்தின் தென்பகுதியில் அமைந் துள்ளது. இதற்கான நான்கெல்கைகளும் துலக்கமாகக் கொடுக்க பட்டுள்ளன. அவைகளில் குறிப்பிடப்பட்டு உள்ள வகுத்துக்கால், முகவனை, பொருத்துக்கரை, என்பன இந்த வட்டாரவழக்குகள்.