பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 எஸ். எம். கமால் ஆ_அரச வழியினர்1. ரெகுநாத கிழவன் சேதுபதியின் மனைவி காதலி நாச்சியார் ... 2 2. முத்துவிஜய ரெகுநாத சேதுபதியின் தமையன் முத்து வைரவநாத சேதுபதி ... 1 டிெ யார் தம்பி முத்துரெகுநாத சேதுபதி ... 2 முத்து விஜயரெகுநாத சேதுபதி மருமகன் தனுக்கோடித்தேவர் ... 1 6 இ-அரசு அலுவலர்கள்1. பாண்டியூர் பெருமாள் சேர்வைக்காரன் ... 1 ஈ. சேதுமன்னர் ஆட்சிக்காலத்தியவை ... 4 5 ஆக மொத்தம் 89 இதுவரை தமிழக வரலாற்றுக்குக் கிடைத்துள்ள செப் பேடுகளில் பல்லவர் காலத்துப் பள்ளன் கோயில், கூரம் செப்பேடு கள்: சோழர்களது ஆனைமங்கலம், ஆலங்காடு, கரந்தைச் செப் பேடுகள்: பாண்டியர்களது சின்னமனூர், தளவாய்புரம் செப்பேடு கள் ஆகியவை தமிழக வரலாற்றுக்குப் பலவற்றாலும் பயனுள்ள வையாகக் கருதப்படுகின்றன. அவைகளைப் போன்றே, மறவர் சீமையின் மகுடபதிகளான சேதுமன்னர்களது இந்தச் செப்பேடு களும் கி.பி. 1607க்கும் கி.பி. 1809க்கும் இடைப்பட்ட இரண்டு நூற்றாண்டுகாலச் செய்திகளை வழங்குகின்ற அரிய வரலாற்று எடுகள் என குறிப்பிடத் தேவையில்லை.