பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/606

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| H 學 * 6 4. Ет 671) . 6 т під . 5 Ш0 т ві) சிவபெருமானையே கணவராகப் பெற்ற காதலியான இறைவி யின் பெயர் இது. மலையத்துவசன் பெற்ற பெருவாழ்வே' " யென குமரகுருபர சுவாமிகள் இந்த மலைவளர் காதலியைத் தான் பாடியுள்ளார். முழுப் பெயரான மலைவளர் காதலி. அன்பின் பெருக்காக, சுருக்கமாக, காதலி என அழைக்கப் பட்டார். இராமேசுவரம் திருக்கோயில் இறைவியின் பெயரும் மலைவளர் காதலிதான். தாயுமான அடிகள் தமது மலைவளர் காதலி பதிகத்தில் இந்த அம்மையை பத்துப் பாடல்களில் போற்றிப் பாடியுள்ளார். . இராமேசுவரம் இறைவியின் பெயரைக் கொண்ட இந்த அம்மையார் கள்ளர் இனத்தைச் சார்ந்தவர். இராமநாதபுரம் சீமையின் வடக்குப் பகுதியும், கள்ளர் மிகுதியான அன்பில், கானாடு பகுதிகளின் சிறந்த கள்ளர் தலைவர்களான ரெகுநாத தொண்டமானையும் நமனத் தொண்டமானையும் அவர்களது வீரச் செயல்களுக்காக தமது தளபதிகளாக ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னர் ஏற்றிருந்தார். நாட்டின் ஒருமைப்பாட்டை பேணவும் அமைதிகாணும் முயற்சியாகவும் மறவர் போன்று முக்குலத்தோரின் மற்றொரு பிரிவினரான இந்த கள்ளர் தலை வர்களுக்கு பதவி கொடுத்தும் பின்னர் அவர்களது தங்கையான காதலி நாச்சியாரை திருமணம் செய்ததும் ஒரு முன்னோடி நிகழ்ச்சி.; ஆனால் காலப்போக்கில் சேதுமன்னர்களது ஆட்சியை நிலைகுலையச் செய்த பணியில், மதுரை, தஞ்சை, மன்னர்கள் ஆற்காட்டு நவாப் ஆகியவர்களுடன் இவர்களது வழித்தோன் றல்களும் ஈடுபட்டனர் என்பது வரலாறு. மறவர்களது எட்டுக்கிளைகளில் சிறப்பான செம்பிநாட்டுக் கிளையைச் சார்ந்தவரான சேதுபதி மன்னர், கள்ளர் இனத்துக் காதலி நாச்சியாரைத் துணைவியாக ஏற்றுக் கொண்டதன் விளைவாக மைத்துனர் முறையிலான ரெகுநாத தொண்ட மானது பதவியை உயர்த்தி திருமயம் கோட்டை ஆளுநராக அவரை நியமனம் செய்தார். அப்பொழுது வலம்புரிச் சங்கு, இராமபாணம் என்ற சிறப்பான வாள், ஆகியவைகளை தொண்ட மானுக்கு பரிசுப் பொருளாக சேதுமன்னர் வழங்கியதாக புதுக் கோட்டை வரலாறு தெரிவிக்கின்றது. சேதுபதி மன்னரது மறை __ į Ra jaram Rao T. Manual of Ramrad Samasthanam (1891) p. p. 228-229