பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 39 சிமை மீது மைசூர் படையெடுப்பு தொடங்கியது. பல அக்கிரமங் களைப் புரிந்து முன்னேறி வந்த இந்தப்படைகளை தடுத்து நிறுத்த இயலாத நிலை. மதுரைப் படைகளைத்திரட்டி தலைமை தாங்கிச் செல்ல முடியாமல் திருமலை மன்னர் நோயுற்றிருந்தார். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தமது எழுபத்திரண்டு பாளையக் காரர்களது படைகளை தளவாய் ராமப்பையன் தலைமையில் மறவர் சீமைக்குள் அனுப்பி சேது நாட்டை சிதைத்துச் சீரழித்த அதே திருமலை மன்னர், வேறு வழி இல்லாமல் சேதுபதி மன்னருக்கு ஓலை அனுப்பி வைத்தார் உதவி கோரி. கடந்ததை மறந்து ரெகுநாத திருமலை சேதுபதி மன்னர், பதினைந்தாயிரம் மறவர் அணியுடன் மதுரையைக் காக்க விரைந்தார். மைசூர் படைகளை திண்டுக்கல் அருகே பொருதி துவம்சம் செய்தார். எஞ்சி ஒடிய மைசூர் படைகளையும் அவர் களது நாட்டின் எல்லைக்குள் துரத்தி அடித்து திருமலை நாயக்கரது புகழுக்கு பெருமை சேர்த்தார். இன்னொரு நிகழ்ச்சி கி.பி. 1680-ல் நிகழ்ந்தது. திருச்சிக் கோட்டையின் தளபதியான ருஸ்தம்கான் திடீரென நாயக்க மன்னர் சொக்கநாதரை சிறைப்படுத்தி திருச்சிக் கோட்டைக்குள் அடைத்து வைத்திருந்தான். இதனைக் கேள்வியுற்ற கிழவன் ரெகுநாத சேதுபதி கன்னிவாடி பாளையக்காரருடன் திருச்சிக்குச் சென்று தந்திரமாக ருஸ்தம்கானைக் கொன்று, நாயக்க மன்னரை சிறை மீட்டி உதவினார். மற்றுமொரு வரலாற்று ஏடு. கி.பி- 1736ல் மதுரை நாயக்க வழியினரின் கடைசி அரசியான ராணி மீனாட்சி வாரிசு இல்லா மல் இறந்தார். அவரது வளர்ப்பு மகனான விஜயகுமாரன் ஆட்சியை மேற்கொள்ள இயலாதவாறு பாண்டிய நாடு முழுவ தும் பெரும் குழப்பம் நிலவியது. விஜயகுமாரனின் தந்தை பங்காரு, திருமலை, மதுரை அரசைக் கைப்பற்றுவதற்கு ஓர் அணியாகவும், ஆற்காட்டு நவாபும், மராத்தியரும் மற்றொரு அணியாகவும் முயன்ற இக்கட்டான நிலை. என்றாலும் மதுரை யில் தொடர்ந்து பரம்பரை மன்னராட்சி ஏற்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் சேதுபதி மன்னர் தமது தளவாயான வெள்ளையன் சேர்வையை மதுரைக்கு அனுப்பி வைத்தார்.