பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/638

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 84 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கிய வர் : முத்துவிஜய ரெகுநாத சேது பதி மருமகன் த னுக்கோடி இராமுத்தேவர் சித்துரெட்டியார் மடம்,

2. செப்பேடு பெற்றவர் நத்தக்காடு 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1678 ஆடி மீ 3 (கி.பி. 756) 4. செப்பேட்டின் பொருள் : வேப்பங்குளம் கிராமம் தானம் இராமநாதபுரம் மன்னரது விருதாவளியாக இந்தச் செப் பேட்டின் அறுபத்தினான்கு விருதுப்பெயர்கள் பொறிக்கப்பட் டுள்ளன. இவையனைத்தும் முந்தையச் செப்பேடுகளில் காணப் பட்டவை . நத்தக்காடு கிராமத்திலுள்ள சித்துரெட்டியார் மடத்துக்கு வேப்பங்குளம் கிராமத்தைச் சர்வமானியமாக வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு உறுதி செய்கிறது. இதனை வழங்கிய கால மாகிய கி. பி. 1756ல் சேது நாட்டை ஆட்சி செய்தவர், முத்துக் குமார விஜய ரெகுநாத சேதுபதி ஆவார். ஆனால் இந்தச் செப் பேடு அவரால் வழங்கப் படவில்லை. அவரது மருகர் தனுக் கோடி ராமுத்தேவர் என்பவர் இதனை வழங்கியுள்ளார். மன் னருக்குப் பதிலாக எந்தச் சூழ்நிலையில் இந்த தானத்தை அவர் வழங்கி உத்தரவிட்டார் என்பது தெரியவில்லை. சேதுபதி ஆட்சியில் சேதுபதிகளைப்போல அரசவழியினரும் அரசு அலுவலர்களும் இத்தகையச் செப்பேடுகள் வழங்கியதை இந்தத்